இலங்கை வீரர்களுக்கு விழுந்த செம அடி.. ஸ்டேரச்சரில் தூக்கி சென்ற சோகம்

0
402

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியில் ஒன்பது பேட்ஸ்மேன்கள் மட்டுமே களத்திற்கு விளையாட வந்தனர். கடைசி பேட்ஸ்மேன் இலங்கை வீரர் பந்தாரா களத்திற்கு விளையாட வரவில்லை. அதற்கு காரணம் இந்தியா பேட்டிங் செய்யும்போது நடந்த ஒரு விபத்து தான். போட்டியின் 43 வது ஓவரின் விராட் கோலி அடித்த பந்தை பிடிப்பதற்காக பந்தாரா மற்றும் ஜாப்ரி வாண்டர்சே ஆகியோர் ஓடிவந்த போது ஒருவரை ஒருவர் கவனிக்காமல் மோதிக்கொண்டனர்.

- Advertisement -

இதில் இரண்டு வீரர்களும் மைதானத்தில் வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். இதனை அடுத்து இலங்கை அணியின் மருத்துவ குழு ,வீரர்களின் காயத்தை சோதித்தனர்.இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. சக இலங்கை வீரர்களும் காயமடைந்தவர்களை நோக்கி ஓடினர். வீரர்களின் நிலை மோசமாக இருந்ததால்  அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாக ஸ்ட்ரக்சர் கொண்டுவரப்பட்டது. இதில் முதலில் பந்தாரா மருத்துவ குழுவினர் அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து ஜாப்ரேவும் வலியால் துடித்ததால் அவரும் ஸ்ட்ரக்சரில் தூக்கி செல்லப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக போட்டி சுமார் பத்து நிமிடம் வரை தடைப்பட்டது.இதனை அடுத்து நடுவர்கள் இலங்கை வீரர்களை போட்டியில் மீண்டும் தொடரும்மாறு அழைத்ததை அடுத்து தான் மீண்டும் பந்து வீசப்பட்டது. அப்போது விராட் கோலி நேரடியாக இலங்கை கேப்டன் ஷனாகாவிடம்  வீரர்களுக்கு என்ன நடந்தது? எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார்.

இந்த சம்பவம் நடந்த போது விராட் கோலி 99 ரன்கள் இருந்த நிலையில் அடுத்ததாக சதம் விளாசினார்.போட்டியின் முடிவில் இலங்கை கேப்டனிடம், காயமடைந்த வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது .அதற்கு தான் போட்டி குறித்து பிசியாக இருந்தால் அவர்களைப் பற்றி கேட்கவில்லை. அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை .இனிமேல்தான் போய் விசாரிக்க வேண்டும் என்று சனக்கா பதில் அளித்தார்.

- Advertisement -