“கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்” இந்தியா-இலங்கை தொடர் அட்டவணை வெளியீடு!

0
1620

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து அணிகளுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்துவிட்டு, தற்போது இந்திய அணி பங்களாதேஷ் சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இதனை அடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற டிசம்பர் 10ஆம் தேதி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 14ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்கவிருக்கிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு இந்தியா திரும்பும் இந்திய அணி, இலங்கை அணி உடன் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்தியா வரவிருக்கும் இலங்கை அணி ஜனவரி 3ஆம் தேதி துவங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இன்று வெளியிட்டு இருக்கிறது பிசிசிஐ.

இந்தியா- இலங்கை தொடர் அட்டவணை:

முதல் டி20 – ஜனவரி 3 – மும்பை

2வது டி20 – ஜனவரி 5 – புனே

3வது டி20 – ஜனவரி 7 – ராஜ்கோட்

முதல் ஒருநாள் – ஜனவரி 10 – கவுகாத்தி

2வது ஒருநாள் – ஜனவரி 12 – கொல்கத்தா

3வது ஒருநாள் – ஜனவரி 15 – கேரளா

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெறும் தொடர் முடிவடைந்த பிறகு, நியூசிலாந்து அணி இந்தியா வரவிருக்கிறது. அதனுடன் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.