“கடைசி ஓவரில் திக் திக் வெற்றி..” பங்களாதேஷூக்கே நாகினி டான்ஸ் காட்டிய ஸ்ரீலங்கா.. 2018ல் செஞ்சத்துக்கு 2022ல் பழி தீர்த்தது” வீடியோ உள்ளே!

0
174

ஆசிய கோப்பை தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி நாகினி டான்ஸ் ஆடிய இலங்கை வீரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

15வது ஆசிய கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் ஐந்தாவது லீக் போட்டியில் மோதின. இரு அணிகளும் தலா ஒரு லீக் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தன. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறலாம் மற்றொரு அணி தொடரை விட்டு வெளியேறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக களம் இறங்கின.

- Advertisement -

துபாய் மைதானம் சேசிங் செய்வதற்கு நன்றாக இருக்கும், ஆகையால் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் என்ற சற்று பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஆபீப் 39 ரன்களும், மிராஸ் 38 ரன்களும் அடித்திருந்தனர். கீழ் வரிசையில் முகமதுல்லா 22 பந்துகளில் 27 ரன்கள் மற்றும் மோசடைக் ஹூசைன் 9 பந்துகள் மட்டுமே பிடித்து 24 ரன்கள் அடிக்க, வங்கதேச அணி இத்தகைய ஸ்கோரை எட்டியது.

இந்த மைதானத்தில் 150 ரன்கள் சேஸ் செய்வதே சற்று கடினம் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்து வரும் நிலையில், 184 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு மிகச் சிறப்பான துவக்கம் அமைந்தது. நன்றாக விளையாடி வந்த நிசாங்கா 20 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, மறுமுனையில் நின்ற குசால் மெண்டிஸ் நங்கூரம் போல நிலைத்து நின்று தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். இவர் 37 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் நான்கு பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் விலாசி அணியை இலக்கிற்கு அருகே எடுத்துச் சென்றார்.

கீழ் வரிசையில் களமிறங்கிய கேப்டன் சனங்கா 33 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இலங்கை அணியின் கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. அந்த சமயத்தில் பேட்டிங் செய்த பெர்னாண்டோ ஒரு பவுண்டரி அடித்தார். நான்கு பந்துகளில் இன்னும் மூன்று ரன்கள் தேவைப்பட்டதுபோது, மூன்றாவது பந்தை வீசிய மேகதி ஹசன் பந்தை கிரீசுக்கு வெளியே கால் வைத்து வீசியதால் நோபால் ஆனது. அந்த பந்தில் இலங்கை வீரர்கள் இரண்டு ரன்கள் அடிக்க இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அணி வெற்றி பெற்ற தருணத்தில் கேலரியில் நின்று கொண்டிருந்த சமிக்கா கருனரத்தினே நாகினி டான்ஸ் ஆடியது இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஸ் டிராபி தொடரில், இலங்கை அணியை தொடரிலிருந்து வெளியேற்றிய வங்கதேச அணி வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடி, சோகத்தில் இருந்த இலங்கை அணி மீது கூடுதலாக வெறுப்புணர்வை வெளிப்படுத்தினர். அதற்கு பழி தீர்க்கும் விதமாக தற்போது ஆசிய கோப்பையில் இருந்து வங்கதேச அணியை இலங்கை அணி வெளியேற்றியது. இதை கொண்டாடும் விதமாக இலங்கை வீரர் சிலர் நாகினி டான்ஸ் ஆடினர்.