இந்திய கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி மிஸ்டரி ஹிஸ்டரி.. உன் காலம் முடிஞ்சு போச்சுபா.. நீ உடனே இதை செய்யணும் – ஸ்ரீகாந்த் அறிவுரை

தற்போது வருண் சக்கரவர்த்தியின் மர்ம சுழல் பந்து வீச்சின் காலம் முடிந்து விட்டது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வந்து வீசிய வரும் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களுக்கு 48 ரன்கள் கொடுத்தார். ஒரு ஓவருக்கு 12 ரன்கள் வீதம் கொடுத்திருக்கிறார். அவர் வீசிய ஒரு ஓவரில் ரோகித் சர்மா தொடர்ந்து ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்து அங்கேயே அவர் நம்பிக்கையை உடைத்தார்.

வருண் சக்கரவர்த்தி பிரச்சனை

வருண் சக்கரவர்த்தி தற்பொழுது கூக்ளி பந்தை மட்டுமே நம்பி வீசி வருகிறார். அவரிடம் சிறப்பான லெக் ஸ்பின் பந்து இல்லை. இதன் காரணமாக பந்து உள்ளே வர மட்டுமே செய்கிறது. இதை புரிந்து கொண்டு விட்ட பேட்ஸ்மேன்கள் அவரை மிக எளிதாக விளையாடுகிறார்கள்.

வருண் சக்கரவர்த்தி ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியில் திருப்பவும் செய்தால் மட்டுமே, அவருடைய உள்ளே வரும் பந்து தாக்கம் நிறைந்ததாக இருக்கும். இல்லையென்றால் அவர் தொடர்ந்து இந்திய டி20 அணியில் இடம் பெறுவது சிரமம் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

காலம் முடிந்து விட்டது

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “அவர் பந்தை வெளியில் திருப்புவதற்கு லெக் ஸ்பின் வீச கற்றுக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார். எப்போதும் கூக்ளி பந்தை மட்டுமே வீசிக்கொண்டு இருந்தால் அது தொடர்ந்து வேலை செய்யாது. அவர் தனது பந்து வீச்சில் வேரியேஷன் கொண்டு வர வேண்டும். அவரது பந்து முன்பு பேட்ஸ்மேன்களுக்கு புரியாத மிஸ்டரியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பேட்ஸ்மேன்கள் புரிந்து கொண்டு எளிதாக விளையாடுகிறார்கள்”

இதையும் படிங்க : கிரீனை ஐபிஎல்க்கு அனுப்பி விட்டு.. ஆஸ்திரேலியா செய்யும் அது சுத்த முட்டாள்தனம் – அம்பதி ராயுடு கோபம்

“பந்தை லேக் ஸ்பின்னாக வீசி ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களுக்கு வெளியில் திருப்ப வேண்டும். அப்படி செய்தால்தான் பேட்ஸ்மேன்கள் உன்னை பார்த்து பயப்படுவார்கள். மேலும் அவருக்கு பவர் பிளேவில் பவுலிங் கொடுக்கக் கூடாது. ரோகித் சர்மா அவர் வீசிய முதல் ஓவரிலேயே அடித்து நொறுக்கி அவர் நம்பிக்கையை உடைத்து விட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by