தினேஷ் கார்த்திக் வேண்டாம் – ஸ்ரீகாந்த்
தினேஷ் கார்த்திக் வேண்டும் – கிரண் மோரே; காரசார விவாதம்!

0
612
Srikanth and kiran more

நேற்றிரவு ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷல் படேல் இருவரும் காயத்தால் அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் அக்ஷர் படேல் இஷான் கிஷான் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல் முகமத் சமிக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

இந்த அணியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் வருகிறார். மேலும் மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக் ஆர் அஸ்வின் இருவரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் தொடர்கிறார்கள். தற்போது அணியில் முகமது சமி இல்லாததும், மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக் ஆர்எஸ் பின் இருவரும் அணியில் இடம் பெற்றிருப்பதும் ஒரு விவாதமாய் மாறி இருக்கிறது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின் ஆவேஸ் கான் மூவருக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது சரியானது இல்லை என்று மூத்த வீரர்களின் மத்தியில் பேச்சு உருவாகியிருக்கிறது. இவர்களுக்கு பதிலாக முகமது சமி, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழுவை சேர்ந்தவர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிரண் மோரே இருவருக்கும் இடையே ஒரு விவாதம் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த் தினேஷ் கார்த்திக்கின் தேர்வை தவறென்று காரணங்கள் கூறினார். இதை மறுத்த கிரண் மோரே அவர் தரப்பு காரணங்களைக் கூறினார்.

தினேஷ் கார்த்திக்கின் தேர்வு பற்றி ஸ்ரீகாந்த் கூறும்பொழுது ” கேஎல் ராகுல் ரோஹித் சர்மா விராட் கோலி சூர்யகுமார் யாதவ் ரிசன்ட் ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா ஆகிய ஏழு பேரையும் நான் அணிக்குள் வைக்கிறேன். 8வது இடத்தில் முகமது சமியை வைத்திருந்தேன். ஆனால் தற்போது அவர் தேர்வு செய்யப்படவில்லை. 8வது இடத்தில் சாகலை வைக்கிறேன். 9 10 இடங்களில் மித வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன புவனேஸ்வர் குமார் அர்ஸ்தீப் சிங் இருவரும் வருகிறார்கள். இவர்கள் தீபக் ஹூடாவை அதிகப்படியாய் அணிக்குள் கொண்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணிக்கு இது தான் சிறந்த கலவையாக இருக்கும். 3 ஸ்பின்னர் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது சரி வராது. இந்த அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமே இல்லை. அவரை பெஞ்சில் தான் அமர வைக்க வேண்டும்” என்று கூறினார்!

- Advertisement -

ஸ்ரீகாந்த்தின் இந்த கருத்தை மறுத்துப் பேசிய கிரன் மோரே ” தினேஷ் கார்த்திக்கை பெஞ்சில் வைப்பதற்காக நிச்சயம் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். அவரை ஆடு மணியில் சேர்ப்பதற்காகவே அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் அவருக்கு பதிலாக வேறொருவர் தான் நிச்சயம் தேர்வு செய்திருப்பார்கள். தினேஷ் கார்த்திக் பினிஷிங்கில் நல்ல ஒரு நம்பிக்கையை தருகிறார். எனவே தினேஷ் கார்த்திக்கின் தேர்வு எந்த விதத்திலும் தவறு கிடையாது” என்று கூறினார்!