பாகிஸ்தானை வீழ்த்தி சினிமாவை விஞ்சும் கலக்கல் குத்தாட்டம் போட்ட இலங்கை வீராங்கனைகள்- வீடியோ இணைப்பு

0
425
W SL

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து, நேபாள்,மலேசியா, ஆகிய ஏழு அணிகள் பங்கு பெற்றன!

ஏழு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதிய பிறகு, புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறினர். இதில் ஒரு அரையிறுதிப் போட்டியில் மிக எளிதாக தாய்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நுழைந்தது.

இன்னொரு இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளித்து விக்கெட்டை காப்பாற்றி வைத்து 122 ரன்களை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்தது.

இதையடுத்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் 3 ஓவர்களில் 31 ரன்கள் விக்கெட் இழப்பு இல்லாமல் வந்தது. ஆனால் இதற்கு அடுத்து 13 ஓவர்களில் பாகிஸ்தான் வீராங்கனைகளால் விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் வெற்றிக்கான ரன்னை அடிக்கவே முடியவில்லை.

கடைசி 4 ஓவர்களில் 24 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகளும் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியால் 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த திரில் வெற்றியை கொண்டாடும் விதமாக இலங்கை அணியின் வீராங்கனைகள் தங்கள் நாட்டு ஒரு பாடலுக்கு மிக அழகாக ஒன்றாக சேர்ந்து ஒரே மாதிரியாக அசத்தல் நடனம் ஆடினார்கள். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!