இந்தியாவுக்கு எதிரான வொய்ட் பால் சீரியஸ்க்கு இலங்கை அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் அதிரடி நீக்கம்!

0
1020
SLC

பிறக்க இருக்கும் புது வருடம் 2023 ஆம் ஆண்டு இந்திய அணி தனது முதல் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி உடன் டி20 போட்டியில் உள்நாட்டில் விளையாடுகிறது.

ஜனவரி 3ஆம் தேதி ஆரம்பித்து 7 ஆம் தேதி வரையில் டி20 தொடருக்கும், ஜனவரி 10ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி முடியும் ஒரு நாள் தொடருக்குமான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த இரண்டு தொடர்களும் இந்திய அணிக்கு உள்நாட்டில் இலங்கை அணி உடன் மோதினாலும் மிகவும் முக்கியமான தொடராகும். ஏனென்றால் உள்நாட்டில் நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை அடுத்து நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை பும் எப்படியான வீரர்கள் உடன் இந்திய அணி செல்ல போகிறது என்பதற்கான முதல் துவக்கம் ஆகும்.

இதற்குத் தகுந்தவாறு டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் t20 இந்திய அணியில் விராட் கோலி ரோஹித் சர்மா கேஎல் ராகுல் சேர்க்கப்படவில்லை. மேலும் இரண்டு வெள்ளை பந்து தொடருக்கும் ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அனுபவ வீரர்கள் சிகர் தவன் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் கழட்டி விடப்பட்டு இருந்தார்கள். மேலும் சஞ்சு சாம்சன் டி20 அணிக்கு இடம் பெற்றிருந்தார். இப்படி நிறைய மாற்றங்கள் இந்திய அணியில் இருந்தது

இதேபோல் இலங்கை அணியும் இந்த தொடருக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த லங்கா பிரிமியர் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேன் இளம் வீரர் நுவனிது பெர்னாடோ ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் அனுபவ வீரர்களான மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமாலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பனுக ராஜபக்சே டி20 அணியில் மட்டுமே இருக்கிறார். ஒரு வருட தடை கேட்கப்பட்டிருந்த ஆல் ரவுண்டர் சமிக கருணரத்னே இரு அணியிலும் இருக்கிறார்.

- Advertisement -

ஒருநாள் போட்டி தொடருக்கான இலங்கை அணி ;
டசன் சனக்கா ( கேப்டன்), பதும் நிஷாங்கா, அவிஷ்கா பெர்னாடோ, சதீரா சமரவிக்ரமசிங்கே, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்செய டி செல்வா, வனிந்து ஹசரங்கா, அசேன் பண்டாரா, மதிஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே, சமிக்க கருணரத்தினே, தில்சன் மதுசங்க, கசன் ரஜிதா, துணித் வெல்லாலகே, பிரமோத் மதுசன், லகிரு குமாரா, நுவனிது பெர்னாடோ.

டி20 போட்டி தொடருக்கான இலங்கை அணி;
டசன் சனக்கா ( கேப்டன்), பதும் நிஷாங்கா, அவிஷ்கா பெர்னாடோ, சதீரா சமரவிக்ரமசிங்கே, குசால் மெண்டிஸ், பனுக ராஜபக்சே, சரித் அசலங்கா, தனஞ்செய டி செல்வா, வனிந்து ஹசரங்கா, அசேன் பண்டாரா, மதிஷ் தீக்ஷனா, சமிக கருணரத்தினே, தில்சன் மதுசங்க, கசன் ரஜிதா, துணித் வெல்லாலகே, பிரமோத் மதுசன், லகிரு குமாரா, நுவன் துசாரா.