திக் திக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியுடன் நுழைந்த இலங்கை!

0
484
Asiacup2022

ஏழு அணிகள் பங்கு பெற்ற பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டு அரையிறுதி போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. முதலில் நடைபெற்ற ஒரு அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அடுத்து மற்றொரு அரையிறுதிப் போட்டி பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

20 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 122 ரன்களை 6 ஒரு விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ஹரிஷ்தா 41 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அனுஷ்கா 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் நஸ்ரா சந்து 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் 3 ஓவர்களில் 31 ரன்களை வந்தது. ஆனால் அடுத்த 7 ஓவர்களில் அதாவது 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்கடுத்து மேலும் 5 ஓவர்கள் விளையாடி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்தது. இதை அடுத்து 30 பந்துகளுக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வீசப்பட்ட ஆட்டத்தின் 16-வது ஓவரில் 11 ரன்கள் வந்தது. மேற்கொண்டு இருபத்திநான்கு பந்துகளுக்கு 23 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடைசி 4 ஓவர்களில் 5, 5, 4, 7 என பாகிஸ்தான் அணியால் 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன!