“நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சில் 76 ரன்களுக்கு பொட்டலமான இலங்கை அணி – மோசமான தோல்வியுடன் ஒரு நாள் போட்டி தொடரை துவங்கியது

0
1062

இலங்கை அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 களை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது . இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் முக்கிய வீரர்களான வில்லியம்சன்,கான்வே ,சவுதி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் டாம் லேதம் அணியை வழிநடத்தினார். நியூசிலாந்து அணி இன்று இளம் வீரர்களை கொண்ட அணியுடன் களம் இறங்கியது.

- Advertisement -

நியூசிலாந்து அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இதனால் அந்த அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 51 ரண்களும் டேரில் மிச்சல் 47 ரன்களும் மற்றும் ரச்சின் ரவீந்தரா 49 ரண்களும் எடுத்திருந்தனர் . இலங்கை அணியின் பந்துவீச்சில் சம்மிகா கருநரத்தினே நான்கு விக்கெட்டுகளையும் கசுன் ரஜிதா மற்றும் குமாரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கேப்டன் சனக்கா மற்றும் மதுசங்கா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஆட்டக்காரர்கள் நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ஒரு ஆட்டக்காரர் கூட நிலைத்து நின்று ஆடாமல் வந்த வேகத்திலேயே திரும்பினர். மூன்று ஆட்டக்காரர்களை தவிர மீதமுள்ள ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க எங்களில் வெளியேறினர்.

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்சமாக 18 ரண்களும் சம்மிகா கருணரத்தினே 11 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஹென்றி சிப்லி அபாரமாக பந்து வீசி 31 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் டேரில் மிச்செல் இரண்டு விக்கெட்டுகளையும் டிக்னர் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. இதனைத் தொடர்ந்து முதல் ஒரு நாள் போட்டியை 198 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. மேலும் இந்த தோல்வியின் மூலம் மற்றொரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது இலங்கை அணி. அடுத்தடுத்து நூறு ரண்களுக்கு குறைவாக ஆட்டம் இழந்த அணி என்ற பெயரையும் இலங்கையணி பெற்றிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 73 ஆண்டுகளுக்கு ஆள அவுட் ஆகி இருந்தது இலங்கை அணி. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது. இதன் மூலம் இந்த சாதனை பட்டியலில் கிணியாவுடன் இணைந்திருக்கிறது இலங்கை அணி.

- Advertisement -