ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது, நம்பமுடியாத கணக்கை போட்டு காண்பிக்கும் எஸ்ஆர்ஹச் அணி ரசிகர்கள்

0
768
SRH

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் சூடு பிடித்துள்ளது. புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை முதல் இரண்டு இடங்களில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நிச்சயமாக இறுதியில் தேர்வாகி விடும்.

இந்த இரண்டு அணிகளை தொடர்ந்து 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3வது இடத்தில் உள்ளது. இந்த அணியும் ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம். தற்பொழுது அனைத்து ரசிகர்களுக்கும் இருக்கும் கேள்வியே, நான்காவது இடத்தில் எந்த அணி இடம்பெறப் போகிறது என்றுதான்.

- Advertisement -

10 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் மேற்கூறிய அணிகள் விளையாடும் விதத்தைப் பொறுத்து, ஏதேனும் ஒரு இறுதியில் பிளே ஆஃப் சுற்றுக்குள் வரவே அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஹைதராபாத் அணி உள்ளே வரவும் ஒரு வாய்ப்பு உள்ளதென தற்போது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத் அணி உள்ளே வர இந்த விஷயங்கள் நடந்தாக வேண்டும்

நான்காவது இடத்திற்கு தற்போது போட்டி போட்டுக் கொண்டிருக்கும் மும்பை கொல்கத்தா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த நான்கு அணிகளும் இன்னுமொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற வேண்டும். மறுபக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

இப்படி நடக்கும் பட்சத்தில் லீக் சுற்றின் முடிவில் மும்பை,கொல்கத்தா,பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளை பெற்றிருக்கும். மறுப்பக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்றிருக்கும். இதனடிப்படையில் நெட் ரன் ரேட் சதவிகிதம் பிரச்சனையை இல்லாமலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4-வது இடத்திற்கு சென்று பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி அடைந்துவிடும்.

- Advertisement -

இந்த கணக்கை தற்போது சமூக வலைதளங்களில் அனைத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரசிகர்கள் பதிவிட்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீதமுள்ள 6 ஆட்டங்களில் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் மும்பை என பலம் வாய்ந்த அணிகளை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற அணிகள் மேற்கூறிய வண்ணம் விளையாடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு பக்கம் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் மிக சுவாரசியமாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் கமெண்டடித்து வருகின்றனர்.