தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை பயிற்சியாளராக நியமித்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் – பயிற்சியாளர்கள் பட்டியல் இணைப்பு

0
966
Sunrisers Hyderabad Coaches

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய ஐபிஎல் தொடர்களில் ஒரே ஒருமுறை மட்டும் கோப்பையை வென்று இருக்கிறது. 2013 முதல் விளையாடி வரும் அந்த அணி 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றும் அசத்தியது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு கேன் வில்லியம்சன் தலைமையில் அந்த அணி ரன்னர் அப் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக போய்க் கொண்டிருந்த அந்த அணி திடீரென இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் தடுமாறியது. இந்த ஆண்டு அந்த அணி லீக் சுற்றின் முடிவில் கடைசி இடத்தை பிடித்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடைசி இடத்தை பிடித்ததே இல்லை. அது மட்டுமின்றி இந்த ஆண்டு அந்த அணியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து, அந்த அணியின் கேப்டன்கள் மாற்றப்பட்டது என மறக்கக் கூடிய ஒரு ஆண்டாக அந்த அணி நிர்வாகத்திற்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அமைந்தது.

- Advertisement -

புதிய அணியாக களம் இறங்கப் போகும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அந்த அணியின் பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து கேன் வில்லியம்சன், இளம் வீரர்கள் அப்துல் சமது மற்றும் உம்ரான் மாலிக்கை அந்த அணி நிர்வாகம் கடந்த மாதம் தக்க வைத்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்பொழுது வீரர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பயிற்சியாளர்கள் மத்தியிலும் அந்த அணி கவனம் செலுத்தியுள்ளது. கோப்பையை கைப்பற்றுவதற்காக சிறந்த லெஜன்ட் கிரிக்கெட் வீரர்களை பயிற்சியாளர்களாக தற்போது அந்த அணி நியமித்துள்ளது.

அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக டாம் மூடி மற்றும் துணை பயிற்சியாளராக சிமோன் காட்டிச் நியமிக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சிற்கு டேல் ஸ்டைன் மற்றும் ஸ்பின் பந்து வீச்சிற்கு முத்தையா முரளிதரன் என இருவரும் பௌலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக பிரைன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ஃபீல்டிங் பயிற்சியாளரராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் கூறிய வீரர்களில் பௌலிங் வியூகத்திற்கு ஆலோசகராக முத்தையா முரளிதரனும், அதேபோன்று பேட்டிங் வியூகத்திற்கு ஆலோசகராக பிரைன் லாராவும் செயல்பட போகின்றனர். அடுத்த ஆண்டு அந்த அணி இவர்களின் துணையோடு மிகச் சிறப்பாக செயல்பட போகின்றது என தற்பொழுது ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -