ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்ந்தெடுத்த வீரருக்கு தடை ? – விசாரினையில் பிசிசிஐ

0
289
CSK IPL Auction 2022

ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே தற்போது வரை விளையாடி வரும் அணிகளுள் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். நான்கு முறை கோப்பையையும் கைப்பற்றி இந்த அணி அசத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகள் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்டிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்த முதல் ஆண்டே கோப்பையை கைப்பற்றி அசத்தியது சென்னை அணி. அணியின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்கு பல முக்கிய கோப்பைகளை பெற்றுத்தந்த தோனி சென்னை அணிக்கும் இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை அணி தோனி, ஜடேஜா, மொயீன் அலி மற்றும் ருத்ராஜ் ஆகியோரை தக்க வைத்தது. நான்கு சிறப்பான வீரர்களுடன் ஏலத்தை அணுகிய இந்த அணி ஏலத்திலும் சிறப்பாக செயல்பட்டு சஹார், உத்தப்பா, ராயுடு, கான்வே போன்ற சிறந்த வீரர்கள் தங்கள் அணிக்கு வாங்கினர். டூப்ளெசிஸ், ரெய்னா போன்ற வீரர்களை எடுக்கவில்லை என்று ரசிகர்கள் சிலர் மனம் சோர்ந்தாலும் ஒரளவு மிகவும் சிறப்பாகவே தங்கள் அணியை இந்த முறை கட்டமைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

- Advertisement -

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹங்கர்கேக்கர் எனும் வீரரை சென்னை அணி 1.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆல்-ரவுண்டராக கருதப்படும் இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்தார். சென்னை அணிக்கு மிகவும் சிறந்த வீரராக வரும் காலங்களில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவருக்கு 19 வயது கிடையாது என்றும் தன்னுடைய உண்மையான வயதை இவர் மறைக்கிறார் என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்போர்ட்ஸ் கமிஷனர் இந்த விஷயத்தை பிசிசிஐ தரப்புக்கு தற்போது தெரியப்படுத்தியுள்ளார். கடிதம் மூலம் இந்த குற்றச்சாட்டு பிசிசிஐ அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை பிசிசிஐ விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இவர் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை செய்யப்படலாம். சென்னை அணி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரருக்கு இப்படி நிகழ்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.