இந்திய – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் – அட்டவணையை வெளியிட்டுள்ள பிசிசிஐ

0
3034
Rohit Sharma and Temba Bavuma

கடந்த நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடர், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர், சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்துள்ள டி20 தொடர் என அனைத்திலும் இந்திய அணி எதிரணியை ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி கொண்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கின்றது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வருகிற மார்ச் மாதம் 16ம் தேதி அன்று நிறைவு பெறுகின்றது. பின்னர் மார்ச் 26ம் தேதி துவங்கி மே மாதம் 29ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெற இருக்கின்றது.

ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 தொடர்

ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் இந்திய அணி ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 1 முதல் ஜூலை 17ம் தேதி வரையில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடர்கள் இந்த இரு அணிகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பாக ஜூன் மாத இறுதியில் (ஜூன் 26ஆம் முதல் ஜூன் 28ஆம் தேதி வரை ) அயர்லாந்தில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்பொழுது அயர்லாந்துக்கு செல்வதற்கு முன்பாக இந்தியாவிலேயே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் திதி வரையில் இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் சென்னை, விசாகப்பட்டினம், ராஜ்கோட், கட்டாக் மற்றும் டெல்லி ஆகிய நகர்களில் நடைபெறப் போவதாகவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.