சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து வீரருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆல்ரவுண்டர் சேர்ப்பு!

0
920
CSK

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே அணி இந்த வருடம் மினி ஏலத்தில் சில வீரர்களை வாங்கி சில வீரர்களை வெளியேற்றி அணியில் இருந்த சின்ன சின்ன ஓட்டைகளை அடைத்தது!

இந்த வகையில் சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவரான ஆல்ரவுண்டர் பிராவோ ஓய்வு பெற்று அணியில் பயிற்சியாளராக இணைந்து கொள்ள, அவரது இடத்தில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் வேகபந்து வீச்சாளர் கைல் ஜெமிசன் அவரது அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

இந்த இளம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை 2021 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மினி ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மட்டுமே சென்னை அணியால் வாங்கப்பட்ட இவர் எதிர்பாராத காயத்தால் இந்த தொடரில் இருந்து முழுமையாக வெளியேறினார்.

இந்த நிலையில் இவரது இடத்திற்கு சென்னை அணியில் யார் வாங்கப்படுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த வருடம் தென்னாபிரிக்கா டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்காவின் கோட்சி வாங்கப்படலாம் என்ற தகவல் பரவலாக இருந்தது.

ஆனால் தற்பொழுது இந்த தென்னாபிரிக்க வீரருக்கு பதிலாக மற்றுமொரு தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சிசண்டா மகலா சென்னை அணிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இவர் இறுதி கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இந்த வருடம் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், மொத்தமாக 127 டி20 போட்டிகளில் விளையாடி 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடும் இறுதிக்கட்ட ஓவர்களை வீசும் இவர் ஓவருக்கு எட்டு ரன்களை மட்டுமே விட்டுத் தரக்கூடியவராக இருப்பது மிகச் சிறப்பான விஷயம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தீபக் சகர், முகேஷ் என்று பவர் பிளே பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் இறுதிக்கட்ட ஒவ்ர்களுக்கு என்று ஸ்பெசலிஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லை. தற்பொழுது இலங்கையின் பதிரணா மற்றும் இவர் வந்திருப்பது சென்னை அணிக்கு ஒரு புதிய பலமாகும்!