சென்னை பாப் டூ பிளிசிஸ்; மும்பை ரஷீத் கான்- தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் வீரர்கள் விபரம்!

0
1503
CSA

உலகின் நம்பர்-1 டி20 தொடரான ஐபிஎல் போலவே உலகின் மற்ற கிரிக்கெட் நாடுகளும் டி20 தொடரை நடத்தி வருகின்றன. தற்பொழுது தென் ஆப்பிரிக்காவும் இப்படி ஒரு டி20 தொடரை நடத்துகிறது. இதில் ஒரு விசேஷமான செய்தி என்னவென்றால்; ஆறு அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த டி20 தொடருக்கான 6 அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான்.

சிஎஸ்கே அணி ஜோகன்னஸ்பர்க் அணியையும், எம்ஐ அணி கேப்டவுன் அணியையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிரிட்டோரியா அணியையும், எஸ்ஆர்எச் அணி போர்ட் எலிசபெத் அணியையும், ராஜஸ்தான் அணி பார்ல் அணியையும், லக்னோ அணி டர்பன் அணியையும் வாங்கி இருக்கின்றன!

- Advertisement -

சி எஸ் ஏ டி20 லீக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் மெகா ஏலம் நடப்பதற்கு முன்பாக, ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை முன்கூட்டியே வாங்கிக் கொள்ளலாம். அதில் ஒரு தென்ஆப்பிரிக்க சர்வதேச வீரரும், சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு தென்னாப்பிரிக்க வீரரும், மூன்று வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறலாம். இந்த மூன்று வெளிநாட்டு வீரர்களில் ஒரே நாட்டைச் சேர்ந்த இருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளுமே மார்க்கி பிளேயர் எனும் இந்த ஒப்பந்த முறையில் ஏலத்திற்கு முன்பு வீரர்களை வாங்கி வருகிறது. இந்த வகையில் சிஎஸ்கே அணி தனது ஜொகனஸ்பர்க் அணிக்காக சிஎஸ்கே அணியின் பழைய வீரரான பாப் டூ பிலிஸ்ஷை வாங்கியிருக்கிறது. இவர் 2011 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் என்பது நமக்கு தெரிந்த விசயமே. தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருக்கும் இவரை தனது ஜோகனஸ்பர்க் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது சிஎஸ்கே அணி நிர்வாகம். எல்லா அணிகளின் மார்க்கெட் பிளேயர் லிஸ்ட் நாளைக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியின் பிரிட்டோரியா அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் அன்றிச் நோர்க்கியாவும், எஸ் ஆர் எச் அணியின் போர்ட் எலிசபெத் அணிக்காக எய்டன் மார்க்ரம்மையும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியின் பேர்ல் அணிக்காக தற்பொழுது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் லக்னோ அணியின் டர்பன் அணிக்காக லக்னோ அணிக்காக விளையாடி வரும் குயின்டன் டி காக் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் தனது வீரர்களின் பெயர்களை அறிவிப்பதும் அணியின் பெயரை அறிவிப்பதுலும் மிக வேகமாக இருக்கிறது. எம்ஐ கேப்டவுன் என்று பெயரை அறிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, லியம் லிவிங்ஸ்டன், ரஷீத் கான், சாம் கரன், ககிசோ ரபடா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. நாளைக்குள் முழு விவரங்களும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!