இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை என இரண்டு அணிகளுக்குமே நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. எனவே இந்தத் தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
அதே சமயத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வெல்லக்கூடாது. தோற்றாலோ அல்லது சமன் ஆனாலோ இந்திய அணிக்கு அது சாதகமான ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இந்த டெஸ்டின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் தேதி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி குபேர்கா செயின்ட் ஜார்ஜ் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு மைதானங்களிலும் சுழல் பந்துவீச்சு சிறப்பாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை அணிக்கு சாதகத்தையே உருவாக்குகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முக்கிய சாதகமான விஷயமாக அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். மேலும் அந்த அணியின் பலமான பவுலிங் யூனிட்டில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் அனைவருமே கிடைத்திருக்கிறார்கள். ஆனால் லுங்கி நிகிடி மட்டும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் மற்றும் கைல் வெர்ரின்னே