2023 உலகக் கோப்பையில் நேரடியாகப் பங்கேற்க முடியாத சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி – காரணம் இதுதான்

0
364
Southafrica Cricket

90களின் பிற்பகுதியில் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய முக்கியமான இரண்டு அணிகள் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்கா அணியும். ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் வாக் தலைமையிலும், தென் ஆப்பிரிக்க அணி ஹன்சி குரோன்யா தலைமையிலும் பல நல்ல வீரர்களைப் பெற்றிருந்தது. இவர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் சாகசங்களுக்குப் பஞ்சமே இருக்காது!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டுவந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு, வெள்ளைப்பந்து போட்டியிலும் சமீபத்தில் டி20 உலகக்கோப்பையை வென்றது!

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணி பலமாக இருந்த காலத்தில் இருந்தே ஐ.சி.சி தொடர்களில் அரையிறுதி போட்டிகள் என்றால் தோற்று வெளியேறுவதுதான் வழக்கம். ஜாக் காலிஸ், ஹசீம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ், டேல் ஸ்டெயின், பாப் டூ பிளிசிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற தென் ஆப்பிரிக்க அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது.

பின்பு சிவப்புப்பந்து போட்டிக்கு டீன் எல்கரை கேப்டனாக நியமித்தும், வெள்ளைப்பந்து போட்டிக்கு டெம்பா பவுமா கேப்டனாக கொண்டும் தென் ஆப்பிரிக்க அணியைத் திரும்ப கட்டியெழுப்பும் வேலைகள் ஆரம்பித்தது. முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநராகவும், லெஜன்ட் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் தலைமைப் பயிற்சியாளராகவும் வந்தார். இதன் பிறகு சமீபமாகத் தென் ஆப்பிரிக்க அணி மெல்ல மெல்ல எழுந்து வந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு பின்னடைவு தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு உருவாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியோடு தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடுவதாய் இருந்தது. ஆனால் உள்நாட்டில் நடத்தும் டி20 தொடரில் விளையாடுவதால் இந்தத் தொடரில் விளையாடவில்லை. இதனால் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் நேரடியாகத் தகுதிபெற முடியாத ஆபத்தில் சிக்கி இருக்கிறது. தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடி வென்றுதான் உலகக்கோப்பையில் கலந்துகொள்ள முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது!

- Advertisement -