கிரிக்கெட் விளையாட்டில் தந்தையை விட சாதித்து காட்டிய 5 கிரிக்கெட் வீரர்கள்

0
2547
Father and Son in Cricket

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில அண்ணன் தம்பி வீரர்கள் இருவரும் சாதித்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல கிரிக்கெட்டில் தந்தை மகன் என இருவரும் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். அவற்றில் ஒரு சில தந்தை – மகன் வீரர்களில் தந்தை கிரிக்கெட் விளையாட்டில் ஜொலித்த அளவுக்கு மகன் ஜொலிக்கவில்லை.

அதற்கு உதாரணமாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு சுனில் கவாஸ்கர் எந்த அளவுக்கு பெயர் போனவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய மகன் ரோகன் கவாஸ்கர் அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் சாதிக்க தவறினார். அதேபோல ரோஜர் பின்னி மிக சிறப்பாக இந்திய அணிக்கு விளையாடினார் ஆனால் அவருடைய மகன் ஸ்டூவர்ட் பின்னி அந்த அளவுக்கு பெயர் சொல்லும்படி விளையாடவில்லை.

இப்படி தந்தை விளையாடி அளவுக்கு சரியாக விளையாடாத மகன்கள் இருக்கும் வேளையில், தந்தை விளையாடி எப்படி பெயர் பெற்றாரோ அந்த அளவை விட மிக சிறப்பாக விளையாடி மகன்களும் பெயர் பெற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தந்தை – மகன் கிரிக்கெட் வீரர்களை பற்றி தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1. ஷான் பொல்லாக் மற்றும் பீட்டர் பொல்லாக்

தென்னாப்பிரிக்கா ஷான் பொல்லாக் மிக சிறப்பாக விளையாடிய வீரர் என்று நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக 90களில் ஷான் பொல்லாக் பந்துவீச்சுக்கு பயப்படாத பேட்ஸ்மேன்கள் கிடையாது. ஷான் பொல்லாக் மொத்தமாக 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 421 விக்கெட்டுகளை எடுத்து, தற்பொழுது வரை தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக திகழ்ந்து வருகிறார். அதேபோல பேட்டிங்கிலும் இவர் இரண்டு சதங்கள் குவித்திருக்கிறார். இவருடைய டெஸ்ட் பேட்டிங் அவரேஜ் 32.31 ஆகும்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசி 387 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய எதிராக தற்போது வரை திகழ்ந்து வருகிறார்.

ஷான் பொல்லாக் போலவே அவருடைய தந்தை பீட்டர் போனால் தென்னாபிரிக்க அணிக்காக அவர் ஆடிய காலகட்டத்தில் மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர். பீட்டர் போலக் மொத்தம் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 116 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். குறிப்பாக ஒரு போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

2. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ்து பிராட்

Stuart Broad Father

இங்கிலாந்து அணிக்கு குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஸ்டூவர்ட் பிராட் எந்த அளவுக்கு முக்கியமான வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மொத்தமாக 148 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 523 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி கைப்பற்றி கொடுத்த ஒரு வீரர். டெஸ்ட் போட்டியில் மட்டுமல்லாமல் 171 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும் ஸ்டூவர்ட் பிராட் கைப்பற்றியிருக்கிறார்.

ஸ்டூவர்ட் பிராட் உடைய தந்தை கிறிஸ் பிராட் இங்கிலாந்து அணிக்காக 1980களில் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1661 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 39.54 ஆகும். அதேபோல 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1361 ரன்கள் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவேரேஜ் 40.02 என்பது குறிப்பிடத்தக்கது.

3. இப்திகார் அலிகான் மற்றும் மன்சூர் அலிகான் பட்டவுடி

மன்சூர் அலிகான் தன்னுடைய 21வது வயதில் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கினார். இந்திய அணிக்காக இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 2293 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவரேஜ் 34.91 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆறு சதங்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக இறுதி வரை ஆட்டமிழக்காமல் 203 ரன்கள் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் அவர் அடித்து இருக்கிறார்.

இப்திகார் அலி கான் இந்தியாவுக்கு மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் இவர் மட்டுமே. 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு மொத்தமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடினார்.

அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து 1956 ஆம் வருடம் இந்திய அணிக்காகவும் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்படி சர்வதேச அளவில் இவர் மொத்தமாக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் பேர்ஸ்டோ

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் 2011ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். ஜானி பேர்ஸ்டோ ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4196 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 24.12 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 6 சதங்களும் 21 அரை சதங்களும் குவித்திருக்கிறார்.

அதேபோல 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3426 ரன்கள் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 48.25 ஆகும். ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 11 சதங்களும், அதேசமயம் 14 அரை சதங்களும் குவித்திருக்கிறார்.

ஜானி பேர்ஸ்டோ பின் தந்தை டேவிட் பேர்ஸ்டோ இங்கிலாந்து அணிக்காக சர்வதேச அளவில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 125 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 206 ரன்கள் குவித்திருக்கிறார். ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் 459 போட்டிகளில் விளையாடி 13,961 ரன்களை குவித்து இருக்கிறார். அதில் 10 சதங்களும் அதேசமயம் 73 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. யோக்ராஜ் சிங் மற்றும் யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்கை பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை இந்திய அணிக்காக விளையாடிய ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களில், எப்போதும் அவர் பெயர் இருந்து கொண்டே இருக்கும். 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக விளையாடி ஆனா தொடருக்கான ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி அசத்தினார். 2007 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச உலக கோப்பை டி20 தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளில் சிக்சர் அடித்து அசத்தினார்.

மொத்தமாக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8791 ரன்கள் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அவருடைய பட்டிங் அவரேஜ் 36.56 ஆகும். அதே சமயம் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 116 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றி இருக்கிறார்.ஒருநாள் போட்டிகளில் இவருடைய பவுலிங் எகானமி 5.1 ஆகும்.

யுவராஜ் சிங் உடைய தந்தை யோகிராஜ் சிங் 1980 மற்றும் 81ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். மொத்தமாக இவர் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 244 ரன்கள் குவித்திருக்கிறார். அதேசமயம் பந்துவீச்சில் இவர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை யில் இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 63 ரன்கள் குவித்து அதே போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.