சிஎஸ்கேவில் ஒரு நடைமுறை இருக்கு, அதனால தான் சின்ன பசங்க வந்தா கூட டாப் கிளாஸா பர்பார்மன்ஸ் பண்றாங்க – முன்னாள் இந்திய வீரர் கருத்து!

0
10520

சிஎஸ்கே அணியில் ஒரு நடைமுறை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட ரோலை மிகச் சிறப்பாக செய்வதால் தான் வெற்றிகரமாக இருந்து வருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 13 சீசன்களில் விளையாடி 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்கிறது. அதில் ஒன்பது முறை இறுதிப்போட்டிக்கும் சென்றிருக்கிறது. நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.

- Advertisement -

நடைபெற்று வரும் 16ஆவது சீசனிலும் சிஎஸ்கே அணி 12 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட ஒரு காலை பிளே-ஆப் சுற்றுக்குள் வைத்துவிட்டது. மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளில் ஒரு போட்டியை வென்றாலே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நிலையிலும் இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் பல வருடங்களாக பல வீரர்கள் வந்து சென்றுவிட்டார்கள். ஆனாலும் ஒவ்வொரு சீசனிலும் வெற்றிகரமாக செயல்பட முடிவதற்கு சிஎஸ்கே அணியில் இருக்கும் இப்படியான நடைமுறைதான் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

“பல வருடங்களாக சிஎஸ்கே அணியில் இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை. அதை யாரேனும் கவனத்தில் இருக்கிறீர்களா? சிஎஸ் ₹கே அணியில் பேட்ஸ்மேன்கள் அவர்களது இடத்தை தாண்டி வேறு இடத்தில் களமிறங்க வேண்டும் என்று ஒருபோதும் வற்புறுத்தப்பட்டது இல்லை. அணியில் பவுலர்களுக்கும் இதுதான் ரோல் என்று வரையறுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுவிட்டது. அணியில் ஒவ்வொருவருக்கும் அவர்களது ரோல் என்னவென்பதை சீசன் துவங்குவதற்கு முன்னரே கொடுத்துவிடுகின்றனர்.

- Advertisement -

மேலும் தோனியிடமிருந்து ஒருபோதும் அடிப்படையான தவறுகளை செய்வார் என்று எதிர்பார்க்கவே முடியாது. தோனியின் சிறந்த கேப்டன்ஷிப்பை ஒரு ஓரமாக வைத்துவிட்டாலும், சிஎஸ்கே அணி வெற்றிகரமாக இருப்பதற்கு மற்றுமொரு காரணம் அவர்களது திட்டத்தை மிகவும் எளிமையாக வைத்துக் கொள்கிறார்கள். அதில் வெற்றிகரமாகவும் இருந்து காட்டியுள்ளார்கள். எம்எஸ் தோனி ஒவ்வொரு சீசனிலும் இதை தவறாமல் செய்து வருகிறார்.” என்றார்.