எனக்கு கொடுக்க வேண்டிய பாராட்டை வேறு ஒருவர் தட்டி சென்று விட்டார் – ரஹானே ஆவேசப் பேச்சு

0
311
Ajinkiya Rahane

இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகள் என்று வந்துவிட்டாலே அஜிங்கிய ரஹானே பெயர் நிச்சயமாக இடம் பெறும். சமீப சில வருடங்களில் அவர் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாக பங்காற்றினார். அவர் இந்தியாவைவிட வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறார்.

இந்தியாவில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரெஜ் 35.74 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 49.02 ஆகும். ஆனால் வெளிநாடுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரெஜ் 40.09 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 49.67 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவர் கடந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு அரை சதங்களுடன் 479 ரன்கள் மட்டுமே அவர் குவித்தார். கடந்த ஆண்டு இவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரெஜ் 20.83 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 43.04 ஆகும்.

அதேபோல இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் மட்டுமே குவித்தார். சுமார் ஒரு ஆண்டிற்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடி வரும் இவரின் இந்திய அணியில் இடம் பெறக்கூடாது என்று ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வந்தனர். அதற்கு அஜிங்கிய ரஹானே தற்போது பதில் அளித்துள்ளார்.

நான் ஆஸ்திரேலியாவில் நிகழ்த்திய சாதனையை யாரும் மறந்துவிட முடியாது

இது சம்பந்தமாக பேசிய அவர் “கிரிக்கெட் போட்டியை முழுவதுமாக புரிந்து அதை உணர்ந்த பார்ப்பவர்கள் இவ்வாறு முதலில் பேச மாட்டார்கள். ஆஸ்திரேலியாவில் நான் நிகழ்த்திய சாதனையை யாரும் மறந்துவிட முடியாது. கிரிக்கெட் போட்டியை அவ்வளவு ஆர்வமாக விரும்பிப் பார்ப்பார்கள் ஒரு சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு பேசுவார்கள்”, என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் விராட் கோலியும் இந்தியாவிற்கு திரும்பி விட்டார்.

பின்னர் அஜிங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமன் செய்து டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக இரண்டு முறை வீழ்த்திய ஒரே அணி என்கிற சாதனையை இந்திய அணி அப்பொழுது நிகழ்த்திக் காட்டியது.

இரண்டாவது முறையாக இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வைத்து விரட்ட மிக முக்கிய காரணமாக ரஹானே இருந்தார். ஒரு கேப்டனாகவும் அதேசமயம் வீரராகவும் அந்த டெஸ்ட் தொடரில் மிக அற்புதமாகத் தன்னுடைய பங்களிப்பை வழங்கினார்.அந்த நிகழ்வையே சுட்டிக்காட்டி தற்போது அஜிங்கிய ரஹானே தன் மீது விமர்சனம் வைக்கும் ஒரு சிலருக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் பொதுவாக நான் இவ்வாறு பேசும் ஆள் இல்லை என்றும், ஒரு சிலர் வெற்றி கணக்கை தங்களது பெயரில் எழுதிக் கொள்வது போல் செயல்படும் ஆள் தான் இல்லை என்றும் கூறியுள்ளார். அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது நெகழ்ச்சிகரமான தருணம் என்றும், தன்னுடைய முழு கவனமும் தற்பொழுது இரஞ்சி டிராபி தொடர் மீது மட்டுமே உள்ளது என்றும் கூறி முடித்தார்.