37 ஓவரிலே கதையை முடிச்சிட்டோம்.. ஸ்மித் ஆணவ பேச்சு

0
92

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி இவ்வளவு பந்துகள் எஞ்சிய நிலையில் தோற்றது இல்லை என்ற சோகமான சாதனையை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் படைத்துள்ளது. டி20 போட்டி கூட 40 ஓவர் நடைபெறும் நிலையில் நேற்று ஆட்டம் ஒட்டுமொத்தமாக 37 ஓவர் தான் நடைபெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்,  இந்த போட்டியை  சீக்கிரமாக முடித்து விட்டோம் என்று கூறினார். வெறும் 37 ஓவர் நடைபெறும் போட்டியை நாம் அதிகளவில் பார்க்க முடியாது என்றும், எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கூறினார்.

ஆடுகளுக்கு எப்படி செயல்படும் என்று எங்களால் கணிக்க முடியவில்லை என்று சுட்டிக்காட்டிய ஸ்மித், ஆனால் எவ்வளவு இலக்கு என்பதை குறித்து எல்லாம் யோசிக்காமல் இந்திய அணி நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் யோசித்து செயல்பட்டதாக ஸ்மித் கூறினார்.

இது போன்ற ஒரு மோசமான நாள் அனைத்து அணிகளுக்கும் நடக்கும் என்று விளக்கமளித்த ஸ்மித், நல்ல வேலையாக நாங்கள் வெற்றி பெறும் அணியாக இருந்தோம் என்று கூறியுள்ளார். சில நாட்களில் தான் பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது அவர்களது பேட்டில் பந்து பட்டு நேரடியாக பில்டர்கள் கையில் பந்து விழும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட ஸ்மித், ஹர்திக் பாண்டியா கேச்சை தான் பிடித்தது ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்படுத்துவிட்டதாக கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா அபாயகரமான வீரராக திகழ்வார் என பாராட்டிய ஸ்மித், அந்த கேட்சை பிடித்தது அதிர்ஷ்டம் என கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ஆட்டமே இழக்காமல் தொடர்ந்து ரன்கள் சேர்த்து வந்ததாகவும் ஸ்மித் அவர்களை பாராட்டினார். இந்த நிலையில் தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமன் நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.