“சீறிப்பாயும் சிங்கப்பெண்” ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஸ்மிரிதி மந்தனா!

0
173

பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் ஸ்மிருதி மந்தானா.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடிய 7 விக்கேட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தானா, 99 பந்துகளுக்கு 91 ரன்கள் விலாசினார். இவரின் ஆட்டம் இந்திய அணியின் திருப்புமுனையாக அமைந்தது. அரைசதம் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்தார். அதிவேகமாக 3000 ரன்களை கடந்த இந்திய பெண் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

ஒட்டுமொத்தமாக இந்திய கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேகமாக இது இருக்கிறது. ஷிக்கர் தவான் 72 இன்னிங்சில் இந்த மைல்கல்லை கடந்தார். முன்னாள் கேப்டன் விராட் கோலி 75 இன்னிங்சில் இந்த மைல்கல்லை கடந்திருக்கிறார். தற்போது ஸ்மிருதி மந்தானா தனது 76 ஆவது இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 88 இன்னிங்சில் மற்றொரு நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் 3000 ரன்களில் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கிரிக்கெட்டை பொருத்தவரை, ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள் கடந்த மூன்றாவது வீராங்கனை ஸ்மிருதி மந்தானா இருக்கிறார். இவருக்கு முன்னதாக ஹர்மன்பிரீத் கவுர், மிதாலி ராஜ் ஆகியோர் இதனை செய்திருக்கின்றனர்.

ஸ்மிரிதி மந்தானா இதுவரை 5 சதங்கள் மற்றும் 24 அரைசதங்கள் அடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பெண் வீராங்கனைகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய பெண்கள் அணி 50 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 143 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியில் இந்திய பெண்கள் அணி 88 எண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.