பங்களாதேசை வீழ்த்திய ஜிம்பாப்வே சிக்கந்தர் ராஸாவின் அதிரடி சத வீடியோ இணைப்பு!

0
287
Sikandar raza

பங்களாதேஷ் அணி ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியது!

இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டிலும் தோற்று இழந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட மற்ற இரண்டு போட்டிகளிலும் தோற்று டி20 தொடரையும் இழந்தது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மிக அபாரமாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி மூன்று போட்டிகளிலும் வென்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் நாட்டிலிருந்து ஜிம்பாவே நாட்டிற்குச் சென்று அங்கு 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் வென்று இரண்டாம் போட்டியில் தோற்று மூன்றாவது போட்டியிலும் தோற்று சிம்பாப்வே அணியிடம் டி20 தொடரை இழந்தது.

இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 303 ரன்கள் முதலில் பேட் செய்து அடித்தும் சிக்கந்தர் ராசாவின் அதிரடி சதத்தால் அந்த ஆட்டத்தை பங்களாதேஷ் அணி தோற்றது. இந்த ஆட்டத்தின் சிகந்தர் ராசா 109 பந்துகளில் 130 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிம்பாவே அணியை வெற்றிபெற வைத்தார்.

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஜிம்பாப்வே அணி முன்னணியில் இருக்க, நேற்று தொடரின் இரண்டாவது போட்டி ஜிம்பாப்வே வின் ஹராரே நகரில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி 293 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வெகு சீக்கிரத்தில் இழந்துவிட்டது. ஆனாலும் இந்த ஆட்டத்திலும் நிலைத்து நின்ற சிக்கந்தர் ராசா மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்து ஜிம்பாப்வேவை ஒருநாள் தொடரையும் வெல்ல வைத்தார். 127 பந்துகளைச் சந்தித்த அவர் 117 ரன்களை எடுத்தார். இந்த இரண்டு ஆட்டங்களிலும் அவரை ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது!

நேற்றைய போட்டியில் அவரது அதிரடி சத்தத்தின் வீடியோ தொகுப்பின் ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி நடக்க இருக்கிறது!