இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் ஓப்பனிங் வீரராக விளையாடக் கூடாது – ஆகாஷ் சோப்ரா

0
51

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்தது. மீதம் ஒரு போட்டி எதிர்பாராதவிதமாக நடைபெறாமல் போனது அப்போட்டி மீண்டும் தற்போது வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நான்கு போட்டிகளில் முடிவில் இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வியை தவிர்க்க வெற்றி பெற வேண்டும் அதே சமயத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்ற வெற்றி அல்லது சமன் செய்ய வேண்டும்.

- Advertisement -

சுப்மன் கில் 3வது அல்லது 4வது இடத்தில் விளையாட வேண்டும்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சுப்மன் கில் ஓபனிங் வீரராக விளையாடக்கூடாது என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் இந்திய அணிக்கு அப்போது நிறைய போட்டிகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஓபனிங் வீரராக சுப்மன் கில் விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது அணியில் காயம் காரணமாக கேஎல் ராகுல் அதேபோல கொரனோ காரணமாக ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறவில்லை. இருவரும் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே நிச்சயமாக இந்திய அணிக்கு சுப்மன் கில் ஓபனிங் வீரராக விளையாட போகிறார் என்று ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இருப்பினும் அவர் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் ஓபனிங் வீரராக விளையாடும் சமயத்தில் அவர் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக சிரமப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் அவர் அவ்வாறு சிரமப்படும் போது இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் கண்டிப்பாக சிரமப்படுவார். குறிப்பாக இங்கிலாந்து மைதானத்தில் அவர் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் விளையாடப் போவதாக செய்தி வெளியானது. இந்தியாவில் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடுவார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை இங்கிலாந்து எதிராக டெஸ்ட் போட்டியில் அவர் எவ்வாறு விளையாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை ஜூலை 1ஆம் தேதி 3:30 அளவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.