சுப்மான் கில் வெறித்தனம் ஆட்டம்.. முதல் சதத்தை விளாசி அசத்தல்.. இந்தியா ரன் குவிப்பு

0
69

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மான் கில் சதம் விளாசி அசத்தினார்.22 வயதான சுப்மான் கில், இதுவரை 11 டெஸ்ட் போட்டியிலும், ஒன்பது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடுகிறார். 2018ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன் விளாசி அனைவரின் கவனத்தையும் பெற்ற சுப்மான் கில், அடுத்த ஆண்டே இந்திய அணிக்கு வந்தார்.

இதனால் விராட் கோலி போல் இவரும் பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும் ஒரு நாள் அணியில் அவரால் நீடிக்க முடியவில்லை. இருப்பினும் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் சுப்மான் கில் இடம் பிடித்தார். கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சுப்மான் கில் ரன் அடிக்க தொடங்கினாலும், அதனை பெரிய இலக்காக மாற்றாமல் ஆட்டம் இழந்து விடுவார்.

இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை ஒரு பேட்டியில் கூறும்போது சுப்மான் கில்லிடம் திறமை இருக்கிறது. ஆனால் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் அவர் ஆட்டம் இழக்கிறார். இதனை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அணியில் நீடிக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு நாள் அணியில் மீண்டும் சுப்மான் கில் இடம் பிடித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரண்டு அரை சதம் விளாசிய சுப்மான் கில், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கிய அவர் ஜிம்பாப்வே பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். 82 பந்துகளில் சதம் விளாசிய கில் 13 பவுண்டரிகளை அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். கே எல் ராகுலும் தனது முதல் ஒருநாள் சதத்தை ஜிம்பாவே அணிக்கு எதிராக தான் அடித்தார். தற்போது சுப்மான் கில்லும் அதேபோல் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி போன்ற சீனர்களுக்கு சுப்மான் கில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார்.