இந்த இந்திய வீரரை விராட் கோலியின் நம்பர் 3 இடத்தில் விளையாட வைங்க – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அறிவுரை!

0
111

ஜிம்பாப்வே தொடரில் இவரை நம்பர் 3 இடத்தில் விளையாட வையுங்கள் என தேர்வு குழுவின் முன்னாள் தலைவர் தேவங் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில தனது சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு மிகவும் திணறி வருகிறார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதிலிருந்து விராட் கோலியின் ஆட்டம் எந்த அளவிற்கு இருக்கின்றது என நாம் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வித போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனால் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய தொடர்களில் இவருக்கு ஓய்வு கொடுத்து வெளியில் அமர்த்தப்பட்டது. அதேநேரம் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு பிசிசிஐ தீவிர தேடுதலில் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் இருப்பார் என்றும் தகவல்கள் வருகின்றன.

ஜிம்பாப்வே அணியுடனான தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்குகிறது. இத்தொடரில் விராட் கோலியின் இடத்திற்கு யார் விளையாடினால் மிகச் சரியாக இருக்கும் என பல கருத்துக்கள் வெளிவந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு அதிகாரி தேவங் காந்தி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

“சுப்மன் கில் மிகவும் இளம் வீரராக இருக்கிறார். அவருக்கு நிறைய வாய்ப்புகளை பிசிசிஐ கொடுத்து சரியாக பயன்படுத்தி வருகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அபாரமாக செயல்பட்டார். துவக்க வீரராக களமிறங்கிய அவர், நன்றாக விளையாடினாலும் மூன்றாவது வீரராக களம் இறங்குவதற்கு அவர் தயாராக இருக்கிறார். அதற்கு ஏற்ற அனுபவம் அவருக்கு கிடைத்துவிட்டது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலியின் இடத்தில் அவரை விளையாட வைத்து பரிசோதிக்க வேண்டும். விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் நீண்ட நாட்கள் இல்லை. இந்திய அணியின் எதிர்காலத்திற்கும் இது சரியானதாக இருக்கும்.” என்றார்.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் கில் அபாரமாக விளையாடி 209 ரன்கள் அடித்திருந்தார். அதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். தொடர் நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நம்பிக்கைக்குறிய துவக்க வீரராக தன்னை நிரூபித்து காட்டி வருகிறார். இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக நிறைய அரை சதங்களை அடித்து வருகிறார். அனுபவத்தை அதிகரித்துக் கொண்டே வருவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் அவர் உச்சத்தை தொடுவார் எனவும் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.