குரங்கு தனம் போச்சு..! விராட் கோலிக்கு பிறகு இனி இவர் தான்.. வசீம் ஜாபர் கருத்து

0
721

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நட்சத்திர வீரர்கள் உருவாகி ஆதிக்கும் செலுத்துவது வழக்கம்.கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், தோனி ,விராட் கோலி ஆகியோர் வரிசையில் அடுத்த நட்சத்திர வீரர் யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வசிம் ஜாபர் கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அண்டர் 19 கிரிக்கெட்டில் களம் இறங்கி புகழ்பெற்ற சுப்மான் கில்,  நடப்பாண்டில் ஐபிஎல் மற்றும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி அசத்தியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து தன்னுடைய 12 ஆவது டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து வசிம் ஜாபர் அளித்துள்ள பேட்டியில் ஒரு வழியாக சுப்மான் கில், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்து இருக்கிறார்.இதை கண்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் சுப்மான் கில் கடைசியாக இரண்டு வாய்ப்புகளை வீணடித்தார். தற்போது அவருடைய குரங்கு தனம் போய்விட்டது என கருதுகிறேன். சுப்மான் கில் ஒரு கிளாஸ் வீரர்.

என்னைக் கேட்டால் விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் சிறந்த வீரராக சுப்மான் கில் உருவாக வாய்ப்பு உள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று போட்டிகளில் விளையாட கூடியவராக திகழ்கிறார் .சுப்மான் கில் அவருடைய மாநில அணிகளுக்கு விளையாடும் போது நடுவரசையில் தான் களமிறங்குவார். இதனால் நீங்கள் அவரை நடுவரிசையில் பயன்படுத்தினாலும் அவருக்கு எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் சுழற்பந்து வீச்சை அவர் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடக்கூடிய திறமை உடையவர்.

ஏற்கனவே தொடக்க வீரராகவும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.கில் தற்போது டெஸ்ட் போட்டியில் சதாம் விளாசி இருப்பதால்  அடுத்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா வந்தால் யாரை நீக்குவார்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளது. என்னை கேட்டால் கிரிக்கெட்டில் ஒரு பழமொழி இருக்கிறது. அது ஏதேனும் பேட்ஸ்மேன் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை அணியில் வைத்து விட்டு பந்துவீச்சாளரை தான் நீக்குவார்கள். இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஏதேனும் ஒரு பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை வைத்து விளையாடுவார்கள் என்று வசிம் ஜாபர் கூறியுள்ளார்.