கேஎல் ராகுலுக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் – யுவ்ராஜ் சிங் கருத்து!

0
1086

இளம் துவக்க வீரருக்கு ஆதரவாக பேசியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

நியூசிலாந்து ஒருநாள் தொடரை முடித்துவிட்டு இந்திய அணி நேரடியாக வங்கதேசம் சென்று தற்போது மூன்று நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் பிறகு டிசம்பர் 14ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

- Advertisement -

கடந்த நான்காம் தேதி முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 186 ரன்கள் அடித்திருந்தது. துவக்க வீரர்கள் சரிவர துவக்கம் கொடுக்காதது மற்றும் மிடில் ஓவர்களில் வரிசையாக விக்கெட் இழந்தது என இந்திய அணி செய்த இரண்டு தவறுகள் பின்னடைவை தந்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்த வங்கதேச அணி கிட்டத்தட்ட 136 ரன்களுக்கு ஒன்பது வீக்கெட்டுகளை இழந்திருந்தது. வெற்றி பெற 51 ரன்கள் இருந்ததுபோது வங்கதேச அணிக்கு கைவசம் மீதம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசம் அணி வெற்றியை பெற்றது.

இந்திய அணியை பற்றி கருத்து தெரிவித்த யுவராஜ் சிங், தற்போது துவக்க வீரர்கள் பற்றியும் சில கருத்துக்களை முன் வைத்தார். “கே எல் ராகுல் ஓரிரு போட்டியில் நன்றாக விளையாடினாலும் அதன் பிறகு மீண்டும் சோதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது உலக கோப்பையிலும் தொடர்ந்தது.” என்று விமர்சித்தார்.

- Advertisement -

அதன் பிறகு சுப்மன் கில் பற்றி பெருமிதமாக பேசிய அவர், “அடுத்த பத்து ஆண்டுகளில் சுப்மன் கில் மிகச்சிறந்த வீரராக வருவார். தொடர்ந்து இந்திய அணிக்காக லிமிடட் ஓவர் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டி20 போட்டிகளிலும் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார். ஐபிஎல் போட்டிகள் குஜராத் அணிக்காக அசத்தினார். அதனை அணி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அவரை எதிர்காலத்திற்கு வளர்க்க வேண்டும். 10 ஆண்டுகளில் மிகப்பெரிய இடத்தில் அவரை பார்க்கலாம். தற்போது இருக்கும் துவக்க வீரர்கள் சொதப்பும் பொழுது கில் பயன்படுத்தலாம்.” என்றார்.