நானே சொல்றேன்.. விராட் கோலிக்கும் ஷுப்மன் கில்-க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு; – விராட் கோலியின் கோச் பேட்டி!

0
587

விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் இருவரிடமும் இந்த ஒரு ஒற்றுமை இருக்கிறது என பேசியுள்ளார் ராஜ்குமார் சர்மா.

சமீப காலமாக ஷுப்மன் கில் சர்வதேச போட்டிகளில் இருந்து வரும் ஃபார்ம் அசாத்தியமானதாக இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 567 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.

- Advertisement -

இதற்கு அப்படியே தலைகீழாக இவருக்கு டி20 போட்டிகள் அமைந்திருந்தது. இந்த வருடம் தான் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார். இலங்கை அணியுடனான டி20 தொடரில் வெறும் மூன்று போட்டிகளில் 58 ரன்கள் மட்டுமே அடித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெறும் ஏழு ரன்கள் மற்றும் 11 ரன்களுக்கு அவுட் ஆகியிருந்தார். இதனால் பஞ்சமே இல்லாமல் விமர்சனங்கள் குவிந்தன.

3வது டி20 போட்டியும் 12 பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்கள் என 63 பந்துகளில் 126 ரன்கள் அடித்தார். இது டி20 போட்டிகளில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஒரு இன்னிங்ஸ் ஸ்கோர் ஆகும். விராத் கோலி வைத்திருந்த சாதனை தற்போது முறியடித்துள்ளார்.

- Advertisement -

தற்போது ஷுப்மன் கில் இருந்து வரும் பார்ம் விராட் கோலியின் ஆரம்பகால கிரிக்கெட்டில் இருந்த பார்மை போன்று இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இன்னொரு விராத் கோலியாகவும் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஒப்பீடுக்கு பதில் கூறியுள்ளார் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா. அவர் கூறியதாவது, “விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் சாதனைகளை இளம் வயதில் ஷுப்மன் கில் முறியடித்து வருவது ஆச்சரியப்படுத்துகிறது மற்றும் அவரது திறமையை உணர்த்துகிறது.”

“விராட் கோலி மற்றும் கில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஒரு முறை சதம் அடித்துவிட்டால் அத்துடன் நிற்பதில்லை. அடுத்தடுத்த போட்டிகளிலும் சதம் அடிக்கும் முனைப்பில் விளையாடுவார். அதை நிகழ்த்தியும் காட்டிவிடுவார். இதே குணம் மற்றும் செயல் இரண்டுமே ஷுப்மன் கில்லிடம் இருப்பதை பார்த்து நான் வியந்தேன்.

ஷுப்மன் கில் இப்படியே இன்னும் சில காலம் தொடர்ந்து நன்றாக விளையாடினால், லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோரின் பட்டியலில் கில் இடம் பிடிப்பார்.” என்றும் கூறினார்.