சுயநலமான ஆட்டம் என தன்னை கலாய்த்த நெட்டிசன்களுக்கு அதிரடி ரிப்ளை செய்த சுப்மன் கில்

0
624

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்று முடிந்த போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 49 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 63 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய லக்னோ அணி 82 ரன்களுக்கு ஆட்டம் இலக்க குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. குஜராத் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

சுப்மன் கில்லை கலாய்த்த நெட்டிசன்கள்

நேற்று கில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் விளையாடினார். மிகவும் மெதுவாக விளையாடினார். சுயநலமாக அவர் நேற்று தன்னுடைய நம்பர்களை அதிகரித்துக்கொள்ளவே இவ்வாறு மிக மெதுவாக விளையாடி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வந்தனர்.

அதை பிரபல பத்திரிக்கை ஒன்று ட்விட்டர் வலைதளத்தில் செய்தியாக பதிவு செய்தது. நேற்று ட்விட்டர் வலைதளத்தில் அந்த பதிவு அதிக அளவில் பகிரப்பட்டது.

- Advertisement -

ஈமோஜி மூலம் ரிப்ளை செய்த சுப்மன் கில்

பிரபல பத்திரிக்கை பதிவு செய்த அந்த பதிவை கோட் செய்து தன்னுடைய பதிலையும் சுப்மன் கில் பதிவு செய்தார். முயல் மற்றும் ஆமை ஈமோஜியை கொண்டு தன்னுடைய பதிலை என்று அதிகாலை தன்னுடைய டுவிட்டர் கணக்கில் அவர் பதிவு செய்தார்.

முயல் மற்றும் ஆமை கதை பற்றி சிறு வயதில் நாம் படித்திருப்போம். அதிலிருந்து கிடைக்கும் செய்தி என்னவென்றால், பொறுமையாக இருந்தால் நாம் எதிலும் வெற்றி பெறலாம் என்று. தன் மீது எழுந்த விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்ளுக்கு, வேகத்தைக் காட்டிலும் விவேகமே வெற்றியை தரும் என்பதை அவர் தன்னுடைய ஈமோஜி மூலம் கூறியது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில் கூறியதுபோல நேற்றைய போட்டியில் மைதானம் மிகவும் கடினமாக இருந்தது. போட்டியின் முடிவில் கில் தவிர வேறு யாரும் அரைசதம் குவிக்கவில்லை. கேஎல் ராகுல், டீ காக், தீபக் ஹூடா மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் இருந்தும், லக்னோ அணி 82 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.