ஐபிஎல் 2024

பேட்டிங் செய்யாம 260 ரன் குடுத்தா எடுத்துக்குவேன்.. நாங்க எந்த இடத்தில தவறு செஞ்சோம்? – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக, ஐபிஎல் தொடரில் மட்டும் இல்லாமல், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி உலகச் சாதனை படைத்தது. 261 ரன்கள் எடுத்தோம் தோற்றது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் கிங்ஸ் தவற விட்டது. அதற்கான தண்டனையை அந்த அணி முதல் பாதியில் அனுபவித்தது.

கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் இருவரும் அரை சதங்கள் கடந்ததோடு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை, வெறும் 10.2 ஓவரில் கொண்டு வந்தார்கள். இவர்கள் அமைத்து தந்த அடித்தளத்தை பயன்படுத்தி விளையாடிய கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. எனவே அந்த அணியின் வெற்றி உறுதி என்று பலரும் நினைத்தார்கள்.

இப்படியான நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 54(20), ஜானி பேர்ஸ்டோ 108(48), ஷஷாங்க் சிங் 68(28) ரன்கள் என அதிரடியில் மிரட்டி, எட்டு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக உலக சாதனை வெற்றியை பதிவு செய்தார்கள்.

- Advertisement -

இந்த எதிர்பாராத தோல்விக்கு பின் பேசிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “இந்த போட்டியின் தொடக்கத்தில் யாராவது 260 ரன்கள் கொடுத்திருந்தால் நான் விளையாடாமலே எடுத்துக் கொண்டிருப்பேன். பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் விதத்தை பார்ப்பதற்கு அபாரமாக இருந்தது. சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் இருவரும் கண்களுக்கு விருந்து கொடுத்தார்கள். இரண்டு அணிகளுமே பிரம்மாண்டமாக விளையாடியது.

இதையும் படிங்க:கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிடுச்சு.. ஆனா இந்த வெற்றிக்கு நாங்க தகுதியானவங்க.. காரணம் இதான் – சாம் கரன் பேச்சு

ஒரு தோல்விக்குப்பின் சென்று எங்கு தவறு நடந்தது என்று ஆராயும், குறிப்பாக 260 ரன்கள் எடுத்து அதை காப்பாற்ற முடியாத போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருக்கிறது. நாங்கள் கண்டிஷனுக்கு தகுந்த திட்டங்களை உருவாக்கிக் கொண்டு வர வேண்டும். நரைன் வெளியே அடித்து விளையாடுவது புத்திசாலித்தனமாக இருக்கிறது. அதை அவர் தொடர்ந்து செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Published by