தோனி, கோலி, ரோஹித் மூவரும் கிடையாது ; இந்த இளம் வீரர் தான் என்னுடைய சிறந்தக் கேப்டன் – விளக்கம் அளித்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர்

0
47
MS Dhoni Virat Kohli and Shreyas Iyer

இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் முதல் முறையாக இந்திய அணியை கேப்டனாக தலைமை தாங்கினார். கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக வெளியேறியதால் அவர் ஒருநாள் தொடரில் கேப்டனாக இந்திய அணியை தலைமை தாங்கினார். பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியிலும் கேஎல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அவர், தற்போது நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக புதிய அணியான லக்னோ அணியை தலைமை தாங்க இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடி வந்த அவர் இந்த ஆண்டு லக்னோ அணி மூலமாக கைப்பற்றப்பட்டார். அவரை 17 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுல் குறித்து பெருமை பேசியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர்

கேஎல் ராகுல் லக்னோ அணியை இந்த ஆண்டு தலைமை தாங்குவது போல் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு முதல் முறையாக கொல்கத்தா அணியை தலைமை தாங்க இருக்கிறார். கடந்த ஆண்டு வரை டெல்லி அணியில் விளையாடிய அந்த அவர் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் 12 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றப்பட்டார்.

சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் அவர் சக அணி வீரர் கே எல் ராகுல் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். “கே.எல். ராகுல் ஒரு சிறந்த வீரர். மைதானத்தில் அவர் தன்மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையும், வீரர்களுக்கு அவர் அளிக்கும் ஆதரவும் அளப்பரியது. ஒரு சில ஓவர்கள் பந்துவீச எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார், இந்த வாய்ப்பை மற்ற கேப்டன்கள் எனக்கு கொடுத்தது இல்லை. எனவே அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் என்று புன்னகையுடன் கூறி முடித்தார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியுடன் மார்ச் 26ஆம் தேதியன்று பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கிறது. அதேபோல கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி அதனுடைய முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணையை வருகிற மார்ச் 28ம் தேதியன்று பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது