கிரிக்கெட்

” நாங்க பண்ண காரியத்துக்கு டிராவிட் சார் டென்ஷன் ஆகி ****னு திட்டிட்டாரு ” சுவரஷ்யமான சம்பவத்தை வெளியிட்ட ஷ்ரேயாஸ் ஐயர்

மைதானத்தில் நாங்கள் விளையாடிய விதத்தை பார்த்து ராகுல் டிராவிட் மிகவும் கோபப்பட்டு திட்டிவிட்டார் என்று ஷ்ரேயாஸ் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இரு அணிகளும் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் அடித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சாய் ஹோப் சதம் விளாசினார். கேப்டன் பூரான் அரைசதம் அடித்தார்.

சற்று கடினமாக இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை என்றாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 71 பந்துகளில் 63 ரன்களும், சஞ்சு சாம்சன் 54 ரன்களும் எடுத்திருந்தனர். அக்ஸர் பட்டேல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச்செய்ததற்கு முன்பாக இவர்கள் இருவரும் தான் சரிவிலிருந்து மீட்டனர். நான்காவது விக்கெட் இருக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்தது.

மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்திருக்கிறார். போட்டி முடிவுற்ற பிறகு அவர் அளித்த பேட்டியில், இவருக்கும் ராகுல் டிராவிற்கும் இடையே நடந்த சுவாரசியமான சில சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

“இரண்டு போட்டிகளிலும் நல்ல துவக்கம் எனக்கு கிடைத்தது. ஆனால் அதனை சதமாக மாற்றுவதற்கு தவறிவிட்டேன். நான் ஆட்டமிழந்த விதம் மிகவும் கடினமான கேட்ச் பிடித்துதான். நான் ஆகையால் அதைப்பற்றி குறையாக எண்ணவில்லை. நிச்சயம் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருக்க வேண்டும்.”

“கடந்த சில வருடங்களாக நான் செய்ததைவிட தற்போது அதிக அளவில் உழைப்பை செலுத்தி வருகிறேன். தொடர்ந்து அதிகமான நேரம் மனதளவிலும் உடலளவிலும் உழைத்து வருகிறேன். இதன் பிரதிபலனாக இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்ததை பார்க்கிறேன்.” என்றார்.

மேலும் பேசிய, “அவர் நானும் சாம்சனும் மைதானத்திற்குள் நிதானமாக விளையாடி வந்தோம். இதனை கேலரியில் இருந்து பார்த்த டிராவிட் மிகவும் கோபமாக இருந்தார். அவர் எங்களுக்கு சில செய்திகளையும் அனுப்பி இருந்தார். நாங்கள் இருவரும் நன்றாக பேசி விளையாடு வந்த நேரத்தில், இலக்கு சற்று அதிகமாக இருப்பதால் அதிரடியான ஆட்டத்தை துவங்கும்படி அவர் செய்தி அனுப்பினார். அந்த சமயம் நான் அவரை நன்றாக கவனித்தேன் கோபத்துடன் இருந்தார். எங்கள் இருவரையும் திட்டிக் கொண்டிருந்தார். அநேகமாக ****னு திட்டினார் என நினைக்கிறேன்” என தனது பேட்டியில் கலகலவென்று பதில் அளித்தார்.

Published by