“விராட் கோலியை பாத்து கத்துக்கோங்கடா” – பாகிஸ்தானுக்கு பேட்ஸ்மேன்களுக்குசொயிப் மாலிக் அறிவுரை!

0
2204

விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் மூத்த வீரர் சோயிப் மாலிக்.

பரபரப்பாக நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி நான்கு 4 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியஅணி, பவர்-பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது. பாகிஸ்தான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது இப்திகர் அகமது மற்றும் ஷான் மசூத் இருவரும் இணைந்து நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர்.

12.2 ஓவர்களில் 91 ரன்கள் இருக்கும்பொழுது இப்திகர் அகமது ஆட்டம் இழந்தார். அப்போது மூன்று விகெட்டுகள் தான் விழுந்திருந்தது. அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணியை மீண்டும் சிக்கலுக்கு தள்ளினர். 120 ரன்களுக்கு 7 விக்கெட் ஆனது. இந்த இடத்தில் தான் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிகம் செலுத்தி விட்டனர்.

அதே நேரம் இந்திய அணி 31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் அவசரம் காட்டாமல் நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். விராட் கோலி அதுவரை நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தவர், கடைசி நேரத்தில் தனது வேகத்தை அதிகரித்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக அடிக்க தொடங்கினார்.

- Advertisement -

பாகிஸ்தான அணி இந்த முறையை தான் தனது பேட்டிங்கில் தவறவிட்டது. இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியதாவது: “விராட் கோலி ஒன்றும் பவர் ஹிட்டர் கிடையாது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் எப்படி சிறப்பாக விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். நிறைய பந்துகளை எதிர்கொண்டிருந்ததால் பாகிஸ்தான் பவுளர்கள் என்ன செய்வார்கள் என்பதை விராட் கோலி நன்கு உணர்ந்து இருக்கிறார். மைதானம் எப்படி இருக்கும் என்பதையும் கணித்து விட்டார்.

ஆனால் பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு மிட்-விக்கெட் திசையில் அடிக்க முயற்சித்து அவுட் ஆனார்கள். அந்த இடத்தில் ஒரு ரன் இரண்டு ரன்களை எடுத்திருக்க வேண்டும். விக்கெட்டுகள் போகாமல் இருந்திருந்தால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி கூடுதல் ரன்களை பெற்றிருக்கலாம். விராட் கோலியிடமிருந்து பாகிஸ்தான் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.” என்று அறிவுறுத்தினார்.