இந்த வாரம் பாகிஸ்தான், அடுத்த வாரம் இந்தியான்னு ரொம்ப தப்பா பேசிட்டேன் மன்னிச்சிருங்க – 99சோயிப் அக்தர் வருத்தம்!

0
2031

இந்தியா, பாகிஸ்தான் என்னோட கணிப்பை தவறென்று நிரூபித்துவிட்டார்கள் என வருத்தம் தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர்.

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் இரண்டு சூப்பர் 12 போட்டியில் தோல்வியை தழுவி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதை சிக்கல் ஆக்கிக் கொண்டது.

அந்த தருணத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து பேச்சாளர் சோயிப் அக்தர் பாகிஸ்தான் அணி மீது மிகவும் காட்டமாக, இந்த வாரம் பாகிஸ்தான் அணி வெளியேறிவிடும் என்று பேசியதோடு மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்கா அணியிடம் இந்தியா தோல்வி தழுவிய பிறகு பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து இந்திய அணி அடுத்த வாரம் வெளியேறிவிடும். அவ்வளவுதான் வித்தியாசம் என பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இதை வைத்து தற்போது வேறொரு கருத்தை முன்வைத்திருக்கிறார் சோயிப் அக்தர்.

“இந்த வாரம் பாகிஸ்தான் அணி வெளியே போனால் அடுத்த வாரம் இந்தியா அணி வெளியே சென்று விடும் என்று நான் கூறியதை இரு அணிகளும் தவறு என்று நிருபித்து விட்டார்கள். இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதினால் ஐசிசி அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் சென்றடைந்தது ரீதியாகவும் ஐசிசிக்கு பெருத்த லாபமும் ஏற்படுத்தி விடும்.

உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதி அணிகள் மோதும் ஆட்டத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன்.” என்று தனது கணிப்பில் தெரிவித்தார்.