அனைத்து காலகட்டக் கிரிக்கெட்டுக்கும் ஏற்ற 3 சிறந்த வீரர்கள் இவர்கள்தான் – ஷோயாப் அக்தர் விளக்கம்

0
86
Shoaib Akhtar and Sachin Tendulkar

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பல பேட்ஸ்மேன்கள் தன்னுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கின்றனர். 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாக வந்து வீசக்கூடிய வெகுசில பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர்.

சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் இவரிடம் ஒரு கேள்வி முன்னெடுத்து வைக்கப்பட்டது. உங்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் போட்டி பொறுத்தவரையில் அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த வீரர்கள் யார் என்று அந்த கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

அந்தக் கேள்விக்கு 3 வீரர்களின் பெயரை சோயப் அக்தர் கூறினார். பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரம் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்னே ஆகியோரை அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த வீரர்களாக அக்தர் தேர்ந்தெடுத்துள்ளார்.

வெகு சீக்கிரத்தில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்

ஷேன் வார்னே பெயரை குறிப்பிட்டு அவர், அவருடைய இழப்பை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார். அவர் ஒரு லெஜன்ட் கிரிக்கெட் வீரர் மனதளவிலும் அவர் ஒரு உன்னதமான மனிதர். அவருடன் இணைந்து நான் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறேன்.

- Advertisement -

அவர் என்னுடைய நெருங்கிய லெக் நண்பர் அவர். லெக் ஸ்பின் பந்து வீச்சில் எப்பொழுதும் அவர்தான் நம்பர் ஒன். அவருடைய பந்துவீச்சை பார்த்து அவரை போன்று கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பல இளம் கிரிக்கெட் வீரர்கள் கிளம்பி இருக்கிறார்கள். வெகு சீக்கிரத்தில் நம்மைவிட்டு அவர் பிரிந்துவிட்டார் என்று வருத்தத்துடன் அவர் குறித்து அக்தர் பேசியிருக்கிறார்.

வாசிம் அக்ரம் :

சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகளையும், 2898 ரன்களையும் குவித்துள்ளார். அதேபோல 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகளையும், 3717 ரன்களையும் குவித்துள்ளார்.

ஒருநாள் போட்டி வரலாற்றில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை (502 விக்கெட்டுகள்) கைப்பற்றி இரண்டாவது இடத்தில் வாசிம் அக்ரம் இருக்கின்றார். டெஸ்ட் போட்டியில் 8ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் (1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 257*ரன்கள்) குவித்த வீரராக வாசிம் அக்ரம் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் (12 சிக்ஸர்கள்) அடித்த வீரரும் வாசிம் அக்ரம் தான்.

சச்சின் டெண்டுல்கர் :

சர்வதேச அளவில் இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களும் 46 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18426 ரன்களும் 154 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். அதே போல ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி 10 ரன்களும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக அரை சதங்கள் மற்றும் அதிக சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக அரை சதங்கள் மற்றும் அதிக சதங்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக பவுண்டரிகள். சர்வதேச அளவில் 100 சதங்கள் என சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் முக்கால்வாசி சாதனைப் பட்டியலில் முதல் இடத்தில் தான் இருப்பார். அவற்றையெல்லாம் தனித்தனியாக இந்த ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாது என்பது தனிச்சிறப்பு.

ஷேன் வார்னே :

சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளையும், 3154 ரன்களையும் குவித்துள்ளார். அதேபோல 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளையும், 1018 ரன்களையும் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டி வரலாற்றில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை (708 விக்கெட்டுகள்) கைப்பற்றி இரண்டாவது இடத்தில் வார்னே இருக்கிறார். அதேபோல டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை (96 விக்கெட்டுகள்) கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் மத்தியில் முதலிடத்தில் வார்னே இருக்கிறார். ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் வார்னே இருக்கிறார்.