சந்தோசமாக சுயசரிதையை படமாக எடுத்துவந்த அக்தருக்கு நேர்ந்த சோகம்; வரம்புமீறிய படக்குழுவினரால் கிளம்பிய சர்ச்சை!

0
158

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்கிற பெயரில் எடுக்கப்பட்டு வரும் தனது சுயசரிதை படத்திலிருந்து விலகியுள்ளார் சோயிப் அக்தர்.

பாகிஸ்தான் அணியின் லெஜெண்டரி வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது வேகப்பந்து வீச்சின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். பல இந்திய லெஜெண்ட் பேட்ஸ்மன்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்திருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 161 கிலோமீட்டர் வேகத்தில் சோயிப் அக்தர் வீசிய பந்து தற்போது வரை அதிவேக பந்தாக இருந்து வருகிறது. இந்த சாதனையை இன்றளவும் எவராலும் முறியடிக்க முடியவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் பல மைல்கல்லை எட்டியுள்ள இவருக்கு “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்கிற பெயரில் சொந்த வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை இரண்டும் கலந்து சுயசரிதை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த வருடம் ஜூலை மாதம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்த வருடம் நவம்பர் மாதம் வெளிவருவதாக இருந்தது.

நன்றாக சென்று கொண்டிருந்த இவரது சுயசரிதை படத்தின் படப்பிடிப்பில், சமீப காலமாக சில சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. அவ்வபோது இதுகுறித்து செய்தித்தாள்களிலும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி தனது சுயசரிதை படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், இனி தனக்கும் அந்த சுயசரிதை படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்திலிருந்தும் விலகிக் கொள்வதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சோயிப் அக்தர்.

இது குறித்து சோயிப் அக்தர் வெளியிட்ட அறிக்கையில்,

“பல மாதம் நன்கு யோசித்தபிறகு, இந்த கடினமான முடிவை நான் எடுத்திருக்கின்றேன். “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” படத்தில் இருக்கும் என்னுடைய ஒப்பந்தங்கள் அனைத்தில் இருந்தும் நான் விலகிக்கொள்கிறேன். இறுதிவரை நான் இதில் இருப்பதற்காக போராடினேன். ஆனால் அது நடக்கவில்லை. படகுழுவினருக்கும் எனக்கும் இருந்த முரண்களை என்னால் சரிசெய்ய முடியவில்லை. தொடர்ந்து என்னுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் இருந்து படக்குழுவினர் மீறியதால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.இனி எனது பெயரையோ எனது சாதனைகளையோ அவர்கள் இந்த படத்தில் பயன்படுத்தினால் அல்லது இதற்கு மேல் இந்த படத்தை என்னை அறியாமல் எடுத்துச் சென்றால் உரிய முறையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.