அறிமுக போட்டியில் அசத்தும் இளம் வீரர் சிவம் மாவி!

0
98
Shivam mavi

இலங்கை அணி தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து தல 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது!

இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் இன்று மும்பையில் இந்தியா இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மற்றும் சிவம் மாவி இருவரும் அறிமுகமானார்கள்!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தீபக் ஹூடா 41, இசான் கிசான் 37, அக்சர் படேல் 31 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் சேர்த்தது.

இதற்கடுத்து களமிறங்கி விளையாடிய இலங்கை அணியின் மிக முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இன்று தனது அறிமுக போட்டியில் விளையாடும் சிவம் மாவி கைப்பற்றி அசத்தியதோடு இந்திய அணிக்கு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தி தந்திருக்கிறார். நிசாங்கா, தனஞ்செய டி சில்வா மற்றும் ஹசரங்கா விக்கெட்டுகளை கைப்பற்றினார்!

தற்பொழுது இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கும் இவர் இளம் வயதில் டெல்லி அணிக்கு விளையாட முயன்று அங்கு தேர்வாக முடியாத காரணத்தால் குடும்பத்தோடு உத்தர பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்து பின்பு உத்தர பிரதேச மாநில அணியில் விளையாட வாய்ப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கொல்கத்தா அணி இவரை நடந்த மினி ஏலத்தில் வெளியே விட ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தனது ஐபிஎல் அணியின் கேப்டனின் தலைமையிலேயே தேசிய அணியிலும் இவர் அறிமுகமாகி இருக்கிறார்!