97 ரன்னில் தவான் பரிதாப ஆட்டமிழப்பு ! 36 வயதில் ஷிக்கர் தவான் புதிய சாதனை !

0
233
Shikhar Dhawan 97 vs WI

இந்திய அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட் தொடரை சமன் செய்து, டி20 மற்றும் ஒருநாள் தொடரை 2-1 என வென்று, கடந்த செவ்வாய் கிழமை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து டிரினிடாட் டொபோக்கோ தீவிற்கு சென்றது!

அங்கு வெஸ்ட் இன்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகளும் டிரினிடாட் டொபோக்கா, போர்ட் ஆப் ஸ்பெய்ன், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று துவங்கி, 24, 27ஆம் தேதிகளில் நடந்து முடிகிறது.

- Advertisement -

ஒருநாள் தொடரின் முதல் போட்டிக்கான டாஸில் வென்ற வெஸ்ட்இன்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சுப்மன் கில் அறிமுகம் ஆனார். முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட, ஷிகர் தவான் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா காயத்தால் விளையாடவில்லை!

இந்திய அணிக்குத் துவக்கம் தர களம் புகுந்த ஷிகர் தவான் – சுப்மன் கில் ஜோடி மிகச்சிறப்பாக இன்னிங்ஸை துவக்கியது. இருவரும் பவுண்டரிகளை அனாசயமாக அடித்ததோடு சிக்ஸர்களையும் அவ்வப்போது பறக்கவிட்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து பிரிந்தது. இரண்டு சிக்ஸர் ஆறு பவுண்டரிகளோடு 53 பந்தில் 64 ரன்கள் எடுத்த சுப்மன் கில் ரன் அவுட் ஆனார்.

இதற்கடுத்து இணைந்த ஸ்ரேயாஷோடு கேப்டன் ஷிகர் தவான் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதம் தாண்டி சதத்தை நோக்கி வேகமாகப் பயணித்தார். இந்த நிலையில் மோட்டி ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 97 ரன்களுக்கு வந்த ஷிகர் தவான் அவர் பந்துவீச்சிலேயே கல்லி பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டியில் அதிக வயதில் சதம் அடித்த கேப்டனாகிறார் ஷிகர் தவான்

ஷிகர் தவான் – 36 வயது 229 நாட்கள் – 2022
முகம்மத் அசாரூதீன் – 36 வயது 120 நாட்கள் – 1999
சுனில் கவாஸ்கர் – 35 வயது 225 நாட்கள் – 1985
எம்.எஸ். தோனி – 35 வயது 108 நாட்கள் – 2016
ரோகித் சர்மா – 35 வயது 73 நாட்கள் – 2022

அதிக முறை 90 ரன்களில் ஆட்டமிழந்த இந்தியர்கள்

சச்சின் டெண்டுல்கல் – 27
ராகுல் டிராவிட் – 12
ஷிகர் தவான் – 10*
வீரேந்திர சேவாக் – 10
சவுரவ் கங்குலி – 9

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 இன்னிங்ஸில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன்கள்

ஹசீம் ஆம்லா – 7032
விராட் கோலி – 6537
ஷிகர் தவான் – 6442
விவியன் ரிச்சர்ட்ஸ் – 6280
ஏ.பி.டிவிலியர்ஸ்- 6124
சவுரவ் கங்குலி- 6064