கேஎல் ராகுல்? ஷிகர் தவான்? 2023 உலககோப்பையையில் யார் துவக்க வீரர்? – தினேஷ் கார்த்திக் கருத்து!

0
1101

123 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையில் யார் துவக்க வீரராக இருப்பார் என்பதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்

டி20 உலககோப்பையை இந்திய அணி இழந்த வருத்தத்தில் இருந்து இன்றும் பலர் வெளிவரவில்லை. பிசிசிஐ இந்த விஷயத்தில் ஏமாற்றமடைந்திருக்கிறது. ஆகையால் 2023 உலககோப்பையை கைப்பற்ற கவனம் செலுத்தி வருகிறது.

டி20 உலக கோப்பை தோல்வியின் எதிரொலியாக தேர்வு குழுவினரை மொத்தமாக நீக்கியது. புதிய தேர்வு குழுவை உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இப்போது இருந்தே கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிகிறது.

சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெற்றிக்கான அத்தனை சாத்திய கூறுகளையும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளது.

ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. ஆனால் இவருடன் யார் துவக்க வீரராக களமிறங்குவார்? என்ற சிக்கல் இப்போது இருந்தே எழுந்துள்ளது. தவான் சிறந்த பார்மில் இருக்கிறார். அதேநேரம் துணை கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார்.

ஷிகர் தவான் அல்லது கே.எல். ராகுல் இருவரில் யார் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார்? என்று கேள்விக்கு தனது பதிலை கொடுத்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

“கண்டிப்பாக ஷிகர் தவான் துவக்க வீரராக களமிறங்குவார். இல்லையெனில் அவரை அணியில் வைத்திருப்பதே வீண்”

“ஷிகர் தவானுக்கு 35 வயதிற்கு மேல் ஆகிறது. எளிதாக அவரை அணியிலிருந்து நீக்கி இருக்கலாம். இன்னும் வைத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர் மீது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை இருந்து வருகிறது.”

“ஐசிசி போட்டிகள் என்றாலே தவான் எப்படி ஆடுவார் என்று பலருக்கு தெரியும். ஐசிசி தொடருக்கு பார்மில் இல்லை என்றாலும் ஐசிசி தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.”

“2019 ஆம் ஆண்டு ஒரு முனையில் ரோகித் சர்மா நன்றாக விளையாடி வந்தால் மறுமுனையில் ஷிகர் தவான் மிகுந்த நம்பிக்கையை கொடுத்து வந்திருக்கிறார்.

ஓரிரு போட்டிகளில் மட்டுமல்லாது, தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். தற்போதும் ஒருநாள் போட்டிகளில் நல்ல பார்மில் இருந்து வருகிறார். மேலும் கேப்டன் பொறுப்பிலும் அவர் அனுபவம் பெற்று வருவதால், இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.” என்றார்.