“இந்திய அணிக்கு இப்படித்தான் இருக்க விரும்புகிறேன்; இப்படி அல்ல” – ஷிகர் தவான்!

0
157
Shikar dhawan

இந்திய கிரிக்கெட்டின் தற்போது அனுபவம் மாதர்குல திறமையும் கொண்ட கிரிக்கெட் வீரர்களில் டெல்லியைச் சேர்ந்த 36 வயதான இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மிகவும் முக்கியமானவர்!

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முகத்தை மாற்ற இந்திய அணி நிர்வாகம் பெரிய முயற்சிகளையும் அதற்கான பரிசோதனைகளையும் செய்து வருகிறது. இதற்கான பொறுப்பை இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் ஏற்று செயல்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இந்தக் காரணத்தால் சிறப்பான பேட்டிங் பார்மில் ஷிகர் தவன் இருந்தும் t20 இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு சிதர்த் அவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் மிக வெற்றிகரமாக இருக்கும் வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர்!

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி ஷிகர் தவானை டி20 போட்டிகளில் கைவிட்டாலும் ஒருநாள் போட்டிகளுக்காக அவரை முக்கிய வீரர்களின் பட்டியலில் வைத்திருக்கிறது. மேலும் கேஎல் ராகுல் இல்லாத பொழுது ரோகித் சர்மா விளையாட முடியாத பொழுது இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் தான் தலைமை தாங்கி வருகிறார். இந்த அளவிற்கு அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த மாதம் தற்போது ஜிம்பாப்வே செல்லும் இளம் இந்திய அணிக்கு ஷிகர் தவான் தான் தலைமை தாங்கி அழைத்துச் செல்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக டி20 போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து பேசும்பொழுது, தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் தான் சரியாக விளையாடினால் தனக்கு இந்திய t20 அணியில் இடம் கிடைக்கும், எனக்கான வாய்ப்புகள் இன்னும் முழுமையாக முடிந்து விடவில்லை, எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது, எனக்கும் எனக்கான நேரம் வரும் என்று ஷிகர் தவன் நம்பிக்கையாய் பேசியிருந்தார்.

- Advertisement -

இன்று அவர் சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதில் ” நான் அமைதியான பக்குவமடைந்த மனிதன். என்னுடைய சிறப்பான செயல்பாடுகள் என்னுடைய அனுபவத்திலிருந்து தான் வெளியில் வருகின்றது. நான் இந்திய அணிக்காக விளையாடும் வரை இந்திய அணியில் சொத்தாகவே இருக்க விரும்புகிறேன் ஒருபோதும் கடமைக்காக இருக்க விரும்பவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் பேசிய அவர் ” நான் ரோகித் சர்மாவுடன் சிறந்த தொடர்பை வைத்திருக்கிறேன். அவர் இந்திய அணியின் தலைவர் என்கிற முறையில் அவரோடு அணியின் எதிர்காலம் குறித்து தொடர்ந்து கலந்து ஆலோசித்து வருவது மிகவும் முக்கியமாகும். நான் இதை எப்பொழுதும் செய்து வருகிறேன். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்!