முக்கியமான நேரத்தில் ரன் அவுட்டான ரூதர்ஃபோர்டு – பெவிலியன் திரும்பும்போது ஆத்திரத்தில் செய்த காரியம்

0
767
Sherfane Rutherford in CPL

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் தற்போது கரிபியன் பிரீமியர் லீக் என்னும் தொடர் நடந்து கொண்டு வருகிறது. கெயில், பிராவோ போன்ற முக்கிய வீரர்கள் பங்கேற்பதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் தில்லாக செல்வதால் பார்வையாளர்களை இந்த தொடர் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இளம் வீரர்களை கண்டுபிடித்து ஊக்குவிப்பதில் இந்த தொடர் பெரும் முனைப்பு காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இளம் வீரர் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதால் புது புது வீரர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த தொடர் மூலம் கிடைத்த வண்ணம் உள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தில் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பேட்ரியாட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது அந்த அணி. அந்த அணியை கரைசேர்க்க இந்தத் தொடரின் இரண்டாவது அதிகபட்ச ரன் எடுத்தவரான ரூதர்போர்டு களமிறங்கினார்.

7 ஆட்டங்களில் இந்த தொடரில் 201 ரன்களை குவித்தவர் ரூதர்ஃபோர்டு. அவர் இந்த அணியை காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் பத்தாவது ஓவரை அல்சாரி ஜோசப் வீசினார் அதை அடித்து 2 ரன்களுக்கு ஆசைப்பட்ட ரூதர்ஃபோர்டு வேகமாக இரண்டாவது ரன்னுக்கு ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்த அசிப் அலி அவருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் இரண்டு வீரர்களும் கடைசியில் ஒரே இடத்தில் வந்து நின்று விட்டனர்.

இதன் காரணமாக ரூதர்ஃபோர்டு ரன் அவுட்டாகி வெளியேறினார். அணியை மீட்டு வெற்றி பெற்று தர வேண்டும் என்ற முனைப்புடன் ஆடிக்கொண்டிருந்த ரூதர்ஃபோர்டு இந்த முறையில் அவுட் ஆனதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டார். இதனால் பெவிலியன் திரும்பும்பொழுது தனது ஹெல்மேட் பேட் மற்றும் கிளவுஸ் என எல்லாவற்றையும் கழற்றி வேகமாக கீழே எறிந்த வண்ணம் சென்றார். இதனைப் பார்க்கும் போதே எந்த அளவுக்கு இவர் கோபத்தில் இருந்தார் என்பது தெரிய வருகிறது.

ரூதர்போர்டு அவுட் ஆனதும் அணி பெரிதாக ரன்கள் எதுவும் கொடுக்க முடியாமல் 118 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதை செயின்ட் லூசியா அணி எளிதாக துரத்தி வெற்றி பெற்றது. இவ்வளவு கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ரூதர்ஃபோர்டு அடுத்த ஆட்டத்தில் எப்படி ஆடப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.