இலங்கைக்கு எதிரான தொடரில் தனது பெயர் இடம் பெறாத வருத்தத்தை, ட்விட்டர் வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கிய இந்திய வீரர்

0
244
Sheldon Jackson

இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நிறைய இளம் வீரர்களுக்கு இந்திய தேர்வு குழு வாய்ப்பு அளித்து இருக்கிறது. இருப்பினும் அனைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியாத காரணத்தினால் ஒரு சில வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உள்ளூர் ஆட்டங்களில் ஷெல்டன் ஜாக்சன்

அதில் ஒரு வீரர் தான் ஷெல்டன் ஜாக்சன். குஜராத்தைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். உள்ளூர் ஆட்டங்களில் மிக சிறப்பாக விளையாடக் கூடியவர். 2019ஆம் ஆண்டு வரை உள்ளூர் ஆட்டங்களில் விளையாடி வந்தார். அதன் பின்னர் தற்பொழுது புதுச்சேரி அணிகளுக்கு விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளில் இடம் பெற்றிருந்தார் என்றாலும் இவர் காண வாய்ப்பு ஐபிஎல் தொடரில் அவ்வளவாக வழங்கப் படவில்லை.

- Advertisement -

76 பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி 5633 ரன்கள் குவித்திருக்கிறார். பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் அவரேஜ் 49.4 ஆகும். அதேசமயம் 60 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 2096 ரன்கள் குவித்திருக்கிறார்.

டி20 போட்டிகளில் மொத்தமாக 1240 ரன்கள் குவித்திருக்கிறார்.4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 38 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 122 ஆகும்.

டிவிட்டர் வலைத்தளத்தில் தனது வருத்தத்தை தெரிவித்த ஜாக்சன்

இலங்கைக்கு எதிரான தொடரில் தனது பெயர் இடம் பெறவில்லை என்கிற வருத்தத்தை அவர் தனது ட்விட்டர் வலைதளத்தில் எமோஜி மூலமாக பதிவிட்டார். பின்னர் தனது பதவியை அவர் தனது ட்விட்டர் வலைதளத்தில் இருந்து நீக்கி விட்டார்.

- Advertisement -

அவர் அந்த பதிவை நீக்கி இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வளைதளத்தில் பரப்பி வந்தனர். இவருக்கு ஆறுதலாக பல ரசிகர்கள் தங்களது ஆதரவை கூறிக்கொண்டு வருகின்றனர். இளம் வீரரான அவருக்கு நிச்சயமாக வருங்காலத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பல ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.