ஷெல்டன் ஜாக்சனின் மின்னல் வேக ஸ்டம்பிங்க்கு குவியும் பாராட்டுகள் ; சச்சின் மற்றும் யுவராஜ் சிங் புகழாரம்

0
189
Sachin and Yuvraj about Sheldon Jackson Wicketkeeping

நேற்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர் முடிவிலேயே சென்னை அணி நிர்ணயித்த இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

நேற்றைய போட்டியில் சென்னை அணியில் அதிகபட்சமாக மகேந்திர சிங் தோனி 50* ரன்களும், கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரஹானே 44 ரன்களும் குவித்தனர். அதேபோல பந்துவீச்சில் உமேஷ் யாதவ் நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளும், பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -
மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த ஷெல்டன் ஜாக்சன்

நேற்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்பு வரை கொல்கத்தா அணியில் சிறந்த விக்கெட் கீப்பர் இல்லை என்கிற விவாதம் நடந்துகொண்டு தான் இருந்தது. அந்த அத்தனை கேள்வியும்,குழப்பமும் நேற்றைய போட்டியில் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஷெல்டன் ஜாக்சன் விக்கெட் கீப்பராக விளையாடினார். இளம் இந்திய வீரரான இவர் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார். நேற்றைய போட்டியிலும் தன்னுடைய அபாரமான விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நேற்றைய போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ராபின் உத்தப்பாவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த ஷெல்டன் ஜாக்சன் அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்தார். மகேந்திர சிங் தோனி எப்படி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வாரோ அதேபோல ஒரு நொடி நம் அனைவரையும் மிரள வைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -
சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கிடம் இருந்து பாராட்டுகளை வாங்கிய ஷெல்டன் ஜாக்சன்

ட்விட்டர் வலைதளத்தில் நேற்று சச்சின் டெண்டுல்கர் ஷெல்டன் ஜாக்சனை குறிப்பிட்டு “சிறப்பான ஸ்டம்பிங், உங்களின் வேகம் மகேந்திர சிங் தோனியின் வேதத்தை எனக்கு நினைவுபடுத்தியது. மின்னல் வேகத்தில் உங்களது ஸ்டம்பிங் இருந்தது” என்று பாராட்டினார்.

அதேபோல யுவராஜ் சிங் ஷெல்டன் ஜாக்சனை குறிப்பிட்டு “ஸ்பின் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் பொழுது தயவு செய்து உங்கள் ஹெல்மட்டை நீங்கள் மாட்டிக் கொள்ளுங்கள். திறமை வாய்ந்த வீரன் நீங்கள், நீண்ட நாட்கள் கழித்து உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் ஜாக்கிரதையாக இருங்கள்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.