10.75 கோடிக்கு எடுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், இனிமேல் டெல்லி அணியில் இல்லை.. எந்த அணிக்கு செல்கிறார் தெரியுமா?

0
5862

டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் வீரர்கள் பரிமாற்ற முறையில் வேறொரு அணிக்கு செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் வழக்கமாக நடைபெறும் வீரர்கள் பரிமாற்றத்தை ஐபிஎல் அணிகள் செய்து கொள்ளலாம். வீரர்கள் பரிமாற்றம் முடிந்த பிறகு நவம்பர் 15ஆம் தேதிக்குள் அதற்கான அதிகாரப்பூர்வ தகவலையும் ஐபிஎல் நிர்வாகத்திடம் அறிவிக்க வேண்டும்.

- Advertisement -

வீரர்கள் பரிமாற்றம் முடிந்த பிறகு சிறிய அளவிலான ஏலம் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காத வீரர்கள் மற்றும் இந்த ஆண்டு ஐபிஎல் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் என பலரும் பங்கேற்கலாம்.

இந்நிலையில் இந்த வருடம் பல்வேறு அணிகள் வீரர்கள் பரிமாற்றத்தை செய்து வருகின்றன. அதில் சில, பெங்களூரு அணியில் இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து பேச்சாளர் பெஹ்ரன்டாப் மும்பை அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை அணியில் இருந்து பிராவோ மற்றும் ராயுடு இருவரும் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வந்திருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த லாக்கி பெர்க்குஷன், ஏலத்தில் எடுக்கப்பட்ட அதே 10.5 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதுபோல இன்னும் சில அணிகளும் வீரர்களை பரிமாற்றம் செய்திருக்கின்றன.

- Advertisement -

ஆர் சி பி அணி மொத்தம் எட்டு பேரை இந்த வருடம் வெளியேற்றுவதாக தகவல்கள் வந்திருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கடந்த ஐபிஎல் ஏலத்தில் 10.5 கோடிக்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார். எதிர்பார்த்த அளவிற்கு அவர் செயல்படவில்லை என தெரிகிறது. ஏனெனில் தாக்கூரை கொல்கத்தா அணிக்கு பரிமாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

கொல்கத்தா அணி ஏற்கனவே லாக்கி பெர்க்குஷன் குர்பாஸ் ஆகிய இருவரை குஜராத் அணியிலிருந்தும், தற்போது ஷர்துல் தாக்கூரை டெல்லி அணில் இருந்தும் எடுத்திருக்கிறது. கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடி வந்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்கிற மற்றொரு தகவல்களும் வந்திருக்கிறது.