இந்த வெளிநாட்டு வீரரை வாங்கி ஆஸ்திரேலிய டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் – ஷேன் வாட்சன் வலியுறுத்தல்

0
1113
Shane Watson

மும்பை அணி இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் விளையாடாத ஜோப்ரா ஆர்ச்சரின் மேல் எட்டு கோடிகளை முதலீடு செய்தது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அதேபோல் எட்டு கோடிக்கு டிம் டேவிட்டை ஏலத்தில் முட்டிமோதி வாங்கிய போதும் பலர் ஆச்சரியப்பட்டனர்!

இந்த ஆறடி ஐந்து அங்குல 26 வயதான இளம் வீரரான டிம் டேவிட் யார் ?

டிம் டேவிட்டின் தந்தை ரோய் டேவிட் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இவர் சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்காக 1997ஆம் ஆண்டு ஐ.சி.சி டிராபியில் பங்கேற்று விளையாடி இருக்கிறார். பின்பு வேலையின் காரணமாக, ஆசியாவில் நிலவிய பொருளாதார மந்தத்தினால் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.

- Advertisement -

ரோய் டேவிட்டின் மகனான டிம் டேவிட்டும் தந்தையைப் போலவே சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்காக 2019ஆம் ஆண்டு அறிமுகமாகி, 2020ஆம் ஆண்டு மார்ச் வரை விளையாடி இருக்கிறார். தற்போது இவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார்.

தற்போது டிம் டேவிட் உலகின் பெரிய டி20 தொடர்களிலும் கவுன்டி போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். ஐ.பி.எல் தொடரில் 2021ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காகவும், தற்போது மும்பை அணிக்காகவும் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா பிக்பாஸ் தொடரில் பெர்த் அணிக்காகவும், தற்போது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

கரீபியன் லீக்கில் செயின்ட் லூசியா அணிக்காகவும், பாகிஸ்தான் லீக்கில்
முதலில் லாகூர் அணிக்கும் தற்போது முல்தான் சுல்தான் அணிக்கும் விளையாடுகிறார். இங்கிலாந்து கவுன்டி அணியில் முதலில் சர்ரே அணிக்காகவும், தற்போது லங்காசையர் அணிக்காகவும் விளையாடுகிறார். இங்கிலாந்தின் நூறு பந்து போட்டி தொடரில் சவுதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடுகிறார். இப்படி இவர் விளையாடாத கிரிக்கெட் தொடர்களே இல்லையென்கிற அளவிற்கு பறந்து பறந்து பலநாடுகளில் விளையாடி வருகிறார். மொத்த டி20 போட்டிகளில் இவரது ஆவ்ரேஜ் 34, ஸ்ட்ரைக்ரேட் 165 என்பதே இவர் இந்த வடிவ கிரிக்கெட்டில் எவ்வளவு ஆபத்தான பேட்ஸ்மேன் என்று உணர்த்தும்!

- Advertisement -

வருகிற செப்டம்பர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. இதற்காக எல்லா கிரிக்கெட் நாடுகளும் வேகமாய் தயாராகி வருகின்றன. நிறைய டி20 போட்டிகளில் விளையாடுகின்றன. தற்போது டி20 கிரிக்கெட் சாம்பியனாக ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. மேலும் இந்த முறை டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதால் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம், டிம் டேவிட்டை டி20 உலகக்கோப்பை அணியில் எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார். டிம் போன்ற அதிரடி பினிசர் பேட்ஸ்மேன் அணிக்குள் வரும்போது மற்ற வீரர்கள் முன்னால் இறங்கி விளையாடுவார்கள். ஆஸ்திரேலிய அணி டி20 வடிவத்தில் பெரிய பலமாய் மாற வாய்ப்புள்ளது!