இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லப்போவது இந்த அணி தான் – ஷேன் வார்னே கருத்து

0
108
Shane Warne IPL Prediction

ஐபிஎல் தொடர் அமீரக மைதானங்களில் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக இந்திய மைதானங்களில் நடந்த இந்த தொடர் தள்ளிப் போனது. மீதி இருக்கும் ஆட்டங்கள் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் இன்னமும் பல ஆட்டங்கள் நடக்க இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே இந்தத் தொடரில் கோப்பை வெல்லப் போகும் அணியை கணித்துள்ளார். பலரும் எதிர்பார்க்கும் சென்னை மும்பை அணிகளை இவர் கூறவில்லை.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி வெல்லும் என தான் நினைப்பதாக அவர் கூறினார். ராஜஸ்தான் அணியில் ஆலோசகராக இருக்கும் இவர் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ராஜஸ்தான் அணியுடன் இணையவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவர் தான் வெளியிட்ட ட்வீட்டில் டெல்லி வெல்ல வாய்ப்புள்ளதாக கூறினார். ரிஷப் பண்ட் தலைமையில் ஆடி வரும் டெல்லி அணி, முன்பு போல் இல்லாது கடந்த மூன்று தொடர்களாக சிறப்பாக ஆடி வருகிறது.

- Advertisement -

கடந்த முறை இதே அமீரக மைதானங்களில் நடந்த தொடரில் டெல்லி அணி இறுதிப் போட்டி வரை சென்றது. கடந்த முறை தவறவிட்டதை இந்த முறை டெல்லி அணி நிச்சயமாக வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார் வார்னே. தவான், பண்ட், ஸ்ரேயாஷ், ராபாடா, நார்கியா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இந்த முறை டெல்லி அணியில் இருக்கிறார்கள

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே விளையாடி வரும் டெல்லி அணி இது வரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது கிடையாது. சேவாக், காம்பீர், வார்னர், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்ற எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் இது வரை ஒரு முறை கூட டெல்லி தொடரை வென்றது கிடையாது. ஆனால் இந்த முறை ஷேன் வார்னே கூறியது போல டெல்லி அணி கோப்பை வெல்லுமா என்று அறிய டெல்லி அணி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.