ஷேன் வார்னே வெளியிட்ட உலகின் டாப் 10 பந்து வீச்சாளர்கள் லிஸ்ட் – ஒரு இந்திய வீரர் கூட இல்லை

0
9124
James Anderson & Dale Steyn and Shane Warne

கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ஸ்பின்னர் என்றால் அது ஷேன் வார்னே தான். சூழலுக்கு சற்றும் ஒத்துவராத மைதானங்களில் கூட இவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஷேன் வார்னே பந்து வீசினால் எந்தப்பக்கம் பவுன்ஸ் ஆகி எந்த பக்கம் பந்து வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. டெஸ்ட் வரலாற்றில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் வரிசையில் இரண்டாம் இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறார் ஷேன் வார்னே. சுழற்பந்து வீச்சுக்கு பெயர்போன ஷேன் வார்னே ட்விட்டரில் கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். உலகின் டாப் 10 பந்துவீச்சாளர்கள் என்று ஷேன் வார்னே கூறிய வீரர்களை குறித்து இங்கு காண்போம்.

1.டெனிஸ் லில்லி

ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்று ஒரு பட்டியல் தயாரிப்போம் என்றால் அதில் முதலிடத்தில் எப்போதும் இருப்பவர் டென்னிஸ் லில்லி. 1970களில் இவரைப் பார்த்து அஞ்சாத பேட்டிங் வீரர் யாருமே இருக்க முடியாது. 70 ஆட்டங்களில் 355 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் லில்லி.

- Advertisement -

2.வாசிம் அக்ரம்

ஸ்விங்கின் சுல்தான் என்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம். இவரது ஸ்விங்கை கணிக்க முடியாமல் ஆட்டமிழந்த வீரர்கள் பலர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான். 502 விக்கெட்டுகளை ஒருநாள் கிரிக்கெட்டில் அக்ரம் வீழ்த்தியுள்ளார்.

3.மால்கோம் மார்ஷல்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 1980-களில் ஆடியவர் மார்ஷல். எண்பத்தி ஒரு டெஸ்ட் போட்டிகளில் 376 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 22 முறை 5 விக்கெட் ஹால்கள் வீழ்த்தி உள்ளவவர் மார்ஷல்.

4.மைக்கேல் ஹோல்டிங்

மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றொரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங். வேகப்பந்து வீச்சின் ரோல்ஸ் ராய்ஸ் என்று பாராட்டப் பெற்ற இவர், 60 ஆட்டங்களில் ஆடி 249 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

5.ரிச்சர்டு ஹாட்லி

தற்போது வரை நியூசிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான். பந்து வீச்சு மட்டும் என்று இல்லாமல் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற வரிசையிலும் இவரது பெயர் இருக்கும். எண்பத்தி ஒரு டெஸ்ட் போட்டிகளில் 431 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹாட்லி.

6.கர்ட்லி அம்ப்ரோஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் பயங்கரமான பந்து வீச்சாளர்கள் வரிசையில் கடைசியாக வந்தவர் அம்ப்ரோஸ். வால்ஷ் என்னும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உடன் இணைந்து இவர் எடுத்த விக்கெட்டுகள் எல்லாம் அற்புதமானவை. 98 போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் எடுத்தவர் அம்ப்ரோஸ்.

7.கிளன் மெக்ராத்

உலகின் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக வலம் வந்த 2000ங்களின் ஆஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத். அதிக வேகம் இல்லை என்றாலும் அவரது அசாத்திய லைன் மற்றும் லெந்த்தை கணிக்க முடியாமல் பல வீரர்கள் அவுட் ஆகி உள்ளனர். 124 ஆட்டங்களில் 863 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மெக்ராத்.

8.டேல் ஸ்டைன்

இந்தத் தலைமுறையும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று வர்ணிக்கப்படும் டேல் ஸ்டெயின் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்தவர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்டெய்ன் இதுவரை 93 ஆட்டங்களில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

9.ஜேம்ஸ் ஆண்டர்சன்

தற்போது கிரிக்கெட் தொடரில் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை டெஸ்ட் அரங்கில் தற்தற்போது வைத்துள்ளவர் இவர். 165 ஆட்டங்களில் 630 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆண்டர்சன்.

10.ஜெஃப் தாம்சன்

எழுபதுகளின் ஆஸ்திரேலிய அணியின் ஒரு தூண் லில்லி என்றால் மரு தூண் தாம்சன். இவரின் ஓடிவரும் தோரணையே பேட்டிங் வீரரை பாதி ஆட்டம் இழக்க வைத்துவிடும். 57 ஆட்டங்களில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி பேட்டிங் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தாம்சன்.