“வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாத அக்தர்” பங்கமாய் கலாய்த்துவிட்ட முகமது சமி!

0
4330

ட்விட்டரில் அக்தருக்கு முகமது சமி பதில் கொடுத்தது தற்போது வைரல் ஆகி வருகிறது.

எட்டாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதின.

- Advertisement -

டாஸ் வென்ற பவுலிங்கை எடுத்தது இங்கிலாந்து அணி. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ரிஷ்வான் 15 ரன்களுக்கும் மற்றும் பாபர் அசாம் 32 ரன்களுக்கும் அவுட் ஆகினர். மிடில் ஆர்டரில் ஷான் மசூத்(38) மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் சதாப்கான்(20) இருவரும் அணியின் ஸ்கொரை உயர்த்த உதவினர்.

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சாம் கரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். ஹரிஸ் புரூக் 20 ரன்களுக்கும், மொயின் அலி 19 ரன்களுக்கும் அவுட்டாக இங்கிலாந்து திணறியது.

- Advertisement -

போட்டியின் 16வது ஓவரை வீசிய சாகின் அப்ரிடி முதல் பந்தை வீசிய பிறகு திடீரென காயம் ஏற்பட்டதால், அவரை வெளியில் அழைத்துச் சென்றனர். அடுத்து வந்த பவுலர் மீதம் இருக்கும் ஐந்து பந்துகளை வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

அதன்பிறகு பாகிஸ்தான் அணி சற்று பின்னடைவை சந்தித்தது என்று கூறலாம். குறிப்பாக, இந்த இடத்தில் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இறுதி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ்(52) அரைசதம் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19 ஓவர்கள் முடிவில் இலக்கை கடந்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டி20 உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

ட்விட்டரில் வார்த்தை போர்!

பாகிஸ்தானின் இந்த தோல்விக்கு வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக, இதயம் உடைந்த ஸ்மைலியை மட்டும் ட்வீட் செய்தார் பாகிஸ்தனின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.

இதற்கு, “மன்னித்துவிடு சகோதரா, கர்மா என்பது எப்போதும் நாம் செய்ததை நமக்கு திருப்பி கொடுத்துவிடும்.” என்று பதில் அளித்தார் முகமது சமி.

முகமது சமி இப்படி பதிவிடுவதற்கு முக்கிய காரணம், இந்த உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறிய போது, அக்தர் பேசிய விதம் பலரையும் கடுப்பேற்றியுள்ளது.

அது மட்டுமல்லாது, அக்தர் வைத்த சில விமர்சனங்கள் தரக்குறைவாகவும் இருந்திருக்கிறது. இவை அனைத்திற்கும் பதில் கொடுக்கும் விதமாக முகமது சமி இப்படி பேசியுள்ளார் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.