“ஷமியா? ஷாகினா? நாளைக்கு பார்த்துக்கலாம்” – ஷாகித் அப்ரிடி பரபரப்பு பேச்சு!

0
1895
Ind vs Pak

டி20 உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்று இன்று துவங்கியிருக்கும் நிலையில், நாளை டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் மிகப்பெரிய போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டி என்றால் எந்த கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியை விட அந்தப் போட்டிக்கு இரண்டு நாட்டு ரசிகர்களை தாண்டி மற்ற நாட்டு ரசிகர்களும் எதிர்பார்க்கும் அளவிற்கு பரபரப்பு நிறைந்து இருக்கும்.

- Advertisement -

இப்படியான நிலையில், கடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதன் முதலில் ஒரு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் என்ற படுதோல்வி.

இதனால் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் எதிர்பார்ப்பு இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டிக்கு தற்போது உருவாகியிருக்கிறது. இந்த போட்டி குறித்து இருநாட்டு முன்னாள் வீரர்களும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் உலக கோப்பை தொடரில் விளையாடாமல் போக, அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயத்தில் இருந்து மீண்டு பாகிஸ்தான் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா அதுக்கு பதில் முகமது சமி வந்திருக்கிறார். இவர்ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய பயிற்சி போட்டியில் ஒருவர் மட்டும் வீசி அதில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை வெல்ல வைத்திருந்தார். இதனால் பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது சமி இருவருக்கும் ஒப்பீடுகள் வைக்கப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறும்பொழுது ” கடந்த சில வருடங்களாக நீங்கள் பார்த்தால் ஷாகினின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் புதிய பந்தை பயன்படுத்தி மிகச் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளராக துவக்க ஓவர்களில் அணிக்கு நல்ல பங்களிப்பை தர வேண்டும். டி20 போட்டியில் முதல் 6 ஓவர்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். முகமது சமியும் இதைச் செய்திருக்கிறார். இந்த இருவருக்குமே புதிய பந்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். நாளை நடைபெற இருப்பது மிகப்பெரிய போட்டி. இந்த போட்டியில் யார் சிறந்தவர்கள் என்பது நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் ” என்று கூறியிருக்கிறார்.

ஷாகித் அப்ரிடி இப்படி கூறி இருக்கையில் கபில்தேவ் இதற்கு நேரெதிராக பேசியிருக்கிறார். அவர் கூறும் பொழுது ” முகமது சமி வீசிய ஒரு ஓவரை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. ஷாகின் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தாக்கம் மிகுந்த அளவில் பந்துவீசி தன்னை நிரூபித்து இருக்கிறார். இருவரையும் ஒப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா இருந்திருந்தால் நான் ஒப்பிட்டு பார்த்திருப்பேன். சமியை இவருடன் ஒப்பிடவே முடியாது” என்று கூறியிருக்கிறார்.